மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் ஞானசேகரை 27, கொலை செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் அருகே இடையன்குளத்தை சேர்ந்தவர் ஞானசேகர். கோதை நாச்சியார்புரத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவரது செங்கல் சூளையில் வேலைபார்த்த கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த முருகதாஸை வேலையை விட்டு நிறுத்தியதால் மகன் மணிகண்டன் உடன் வேறு சூளைக்கு சென்று விட்டார். மணிகண்டன் செல்லும்போது ஞானசேகரின் சூளையில் தான் வளர்த்து வந்த புறாக்களை விட்டு சென்று விட்டார். சில நாட்களுக்கு முன் தான் வளர்த்த புறாக்களை எடுத்துச் செல்வதற்காக திரும்பி வந்து கேட்டபோது அங்கு புறாக்களை காணவில்லை.இது குறித்து ஞானசேகரிடம் கேட்டதற்கு புறாக்கள் பறந்து விட்டதாக கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மே 11 இரவு சூளையில் இருந்த ஞானசேகரை நண்பர்கள் நாகராஜ், பேச்சிமுத்துவுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து தப்பினார்.இது குறித்து விசாரித்த வடக்கு போலீசார் மணிகண்டன் 21, நாகராஜ் 24, பேச்சிமுத்து 24 மூவருடன் கொலைக்கு திட்டம் தீட்டி கொலையாளிகள் தப்பிச்செல்ல உடந்தையாக இருந்த முருகதாஸ் 52, அரிச்சந்திரன் 27, முத்துப்பாண்டி 47, ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago