உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் இல்லாத 60 அரசு கல்லுாரிகள்!

முதல்வர் இல்லாத 60 அரசு கல்லுாரிகள்!

''தமிழகத்தில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. அதில், 60க்கும் அதிகமான கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், கல்லுாரிகளின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித் தரமும் குறைகிறது. அரசு கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில், தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. கல்லுாரி ஆசிரியர்களின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் உள்ளதால், அனைத்து கல்லுாரிகளுக்கும் ஒரே நாளில் முதல்வர்களை நியமிக்க முடியும். அதை செய்ய, அரசு தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை. கல்லுாரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில், மாணவர் சேர்க்கை பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லுாரிகளின் கல்வி மேம்பாட்டு பணிகளையும் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.- ராமதாஸ்,பா.ம.க., நிறுவனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ