மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டம்
24-Feb-2025
வேடசந்துார்: திண்டுக்கல் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் சிலைகளை வேடசந்துாரில் வைத்து பூஜை செய்து கிராம கோயில்களுக்கு கொண்டு சென்று பக்தர்களே பூஜை செய்யும் வகையில் நேற்று முன்தினம் விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இதை மீறி பூஜை நடத்தி மறியலில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் 45, உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் 65 பேரை அன்று மாலையிலே விடுவித்த போலீசார், செந்தில்குமார், மாவட்ட தலைவர் ராஜா 47, கிழக்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து 37, ஒருங்கிணைப்பாளர் சதீஷ் 40, மாவட்ட துணைத் தலைவர் கோம்பை கணேசன் 44, ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
24-Feb-2025