உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேல்நிலைப்பள்ளி மாணவர் 80% பேருக்கு தமிழையே சரியாக படிக்க தெரியவில்லை: சொல்கிறார் ஆசிரியர் சங்க தலைவர்

மேல்நிலைப்பள்ளி மாணவர் 80% பேருக்கு தமிழையே சரியாக படிக்க தெரியவில்லை: சொல்கிறார் ஆசிரியர் சங்க தலைவர்

''தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி படிக்கும் 80 சதவீத மாணவ - மாணவியருக்கு தமிழையே முறையாக எழுதப் படிக்கத் தெரியவில்லை,'' என்று, புதுக்கோட்டையில் தமிழக மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சிறப்பு தலைவர் மணிவாசகன் தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் 80 சதவீத மாணவ - மாணவியருக்கு தமிழ் முறையாக எழுதத் தெரியவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. தமிழகத்தில் கடந்த காலங்களில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் இருந்தாலும், விருப்ப பாடமாக ஒன்று இருந்தது; இடையில் அது கைவிடப்பட்டது. விருப்ப பாடம் மீண்டும் கொண்டு வரப்பட்டால், அது மாணவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடாது.தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கொண்டு வந்தால், அவர்கள் படிப்பது மிகவும் சிரமம். தமிழ் மொழி சார்ந்து எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளிகளில் இல்லை என்பதால் தான், மாணவர்களுக்கு தமிழில் எழுதக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது.ஆசிரியர்கள் மீது பாயும், 'போக்சோ' சட்டத்தில் 10 வழக்குகள் இருந்தால், ஒன்பது வழக்குகள் பொய் வழக்குகளாக தான் உள்ளன. தண்டனை கொடுக்க முடியாத சூழ்நிலையில் தான் நீதிமன்றம் உள்ளது.ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் போது, தண்டனை பெற்றால் மட்டுமே அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும். அரசியலுக்காக வேண்டுமானால் அமைச்சர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும், ஆசிரியர் பணி வேறு எங்கும் செய்ய முடியாத அவருடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்றும் கூறலாம்.ஆனால், ஆசிரியர் விதிப்படி, அவ்வாறு செய்ய முடியாது. மொத்தமே 210 நாட்கள் பள்ளிகள் இயங்கக்கூடிய சூழ்நிலையில், அதில் 10 தினங்கள் கலை விழா என்ற பெயரில் மாணவர்களின் படிப்பு வீணாகிறது.எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் இருந்தபோது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.மாணவர்களுக்கு தேர்வு வருவதற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். களப் போராட்டத்திற்கு ஆசிரியர்களை அரசு தள்ளி, மாணவர்களை வஞ்சிக்கக்கூடாது. இவ்வாறு மணிவாசகன் தெரிவித்தார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

T.Senthilsigamani
பிப் 24, 2025 07:02

மிக சரியாக தான் சொல்லியிருக்கிறார் . அதனால் தான் பத்தாவது பொது தேர்வில் கூட போனவருடம் தமிழில் அதிக அளவில் மாணவர்கள் பெயிலாகி உள்ளனர் .இதை தவிர வேறு என்ன நிரூபணம் வேண்டும் .


KaySun
பிப் 23, 2025 23:06

அச்சடித்தால் முடியாதே.


Jay
பிப் 23, 2025 22:53

தமிழ் படம் நடத்தும் ஆசிரியர்களை முதலில் ல, ள,ழ ஒழுங்காக உச்சரிக்கிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். இது போன்ற தமிழ் அடிப்படை தெரியாத ஆசிரியர்களை உடனடியாக மாற்றி நல்ல ஆசிரியர்களை பணி அமர்த்தினால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தமிழ் திறன் உயரும்.


chennai sivakumar
பிப் 23, 2025 21:38

கற்று கொடுக்கும் ஆசிரியருக்கு ஒழுங்காக தமிழ் தெரியுமா என்பதை சோதனை செய்து விட்டு பிறகு மாணாக்கர்கள் மீது குற்றம் கண்டு பிடிக்கலாம்


Puvan Vallipuram
பிப் 23, 2025 20:26

தமிழக கல்வி முறையில் தமிழ் கட்டாய மொழி இல்லை. சில பள்ளிகள் உருது மற்றும் பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகப் பின்பற்றுகின்றன. இப்பள்ளியில் தமிழ் மொழி இல்லை.தமிழகத்தில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. உருது மற்றும் பிரெஞ்சு பள்ளிகளைப் பாதுகாக்க புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கிறது.


nv
பிப் 23, 2025 20:18

இந்த திருட்டு திராவிட கும்பலுக்கு தமிழும் தெரியாது, படிப்பும் கிடையாது.. இவர்களின் ஒரே இலக்கு எ‌ப்படி கொள்ளை அடிப்பது, குடும்பம் வளர்ப்பது..


T.sthivinayagam
பிப் 23, 2025 17:38

ஆழ்வார்கள் அடியார்கள் வளர்த்த தமிழை காக்க அடியார்களை காக்கும் சிவன் முக்கன் திறக்க வேண்டும்


vivek
பிப் 23, 2025 18:47

தினமும் கோயிலின் முன் உட்கார்ந்து இதை சொல்லி இருந்தால் ஏதாவது சில்லறை கிடைத்திருக்கும்


S. Venugopal
பிப் 23, 2025 17:17

தற்பொழுது உயர்த்திரு மா நன்னன் போன்று தமிழ் கற்றுக்கொடுக்க தமிழ் ஆசிரியர்களை உருவாக்கினால் தமிழ்மொழியை தாய்மொழியாக இல்லாதவர்களைக் கூட தமிழை நன்கு உச்சரிக்கவைக்கலாம்


ஆரூர் ரங்
பிப் 23, 2025 16:05

எதுக்கு கத்துக்கணும் ? திராவிட நிறுவனர் கூட காட்டுமிராண்டி, சனியன் ன்னு வசை பாடியதை படிச்சிட்டு.. அதையே எதுக்கு?


theruvasagan
பிப் 23, 2025 16:01

தமிழ் எந்த மொழிக்கும் சளைத்ததல்ல. இப்படி வெட்டியாக உருட்டி உருட்டியே தமிழை இளைக்க வைத்து விட்டார்கள்.


முக்கிய வீடியோ