உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்ரலில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு

ஏப்ரலில் 8வது பொருளாதார கணக்கெடுப்பு

சென்னை: மத்திய அரசின் புள்ளியியல் துறையால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாநில வாரியாக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் மாதம் துவங்கி, டிசம்பர் வரை நடக்கவுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசால், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைமை செயலர் முருகானந்தம் தலைமையில், மாநில அளவிலான குழு நியமிக்கப்பட்டு உள்ளது.மாவட்ட அளவிலான குழுக்கள், கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையை பொறுத்தவரை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி