உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் அடி வாங்கிய 10 வயது சிறுமி சிறுநீரகம் செயலிழந்து பரிதாப மரணம்: கொடூர தாய் சிறையில் அடைப்பு

தினமும் அடி வாங்கிய 10 வயது சிறுமி சிறுநீரகம் செயலிழந்து பரிதாப மரணம்: கொடூர தாய் சிறையில் அடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பெற்ற மகளை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் தாய். உள்காயம் காரணமாக சிறுநீரகம் பழுதாகி மரணமடைந்தார் 10 வயது சிறுமி. பிரேத பரிசோதனை அறிக்கையில் இத்தகவல் தெரிந்ததையடுத்து, தாயை போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்த கொடூர சம்பவம் குறித்த விபரம்:கோவை, தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 39. இவரது மனைவி சாந்தலட்சுமி, 33. தம்பதியின் மகள் அனுஸ்ரீ, 10. ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். மே 17ம் தேதி கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக கூறி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, தட்சிணாமூர்த்தி செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலில், 33 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. போலீசார் சிறுமியின் தாய் சாந்தலட்சுமியிடம் விசாரித்தனர். இதில், அவர் மகளை அடித்து துன்புறுத்தியதே மரணத்துக்கு காரணம் என, தெரியவந்தது. அவரை போலீசார் சிறையில் அடைந்தனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறுமி அனுஸ்ரீ நன்றாக படிக்கக் கூடியவர். இருப்பினும் சாந்தலட்சுமி மேலும் நன்றாக படிக்க வலியுறுத்தி, அடிக்கடி சிறுமியை கரண்டியால் அடித்துள்ளார். இதை, அருகில் வசிப்பவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனையில், சிறுமியின் உடலில் பல இடங்களில், தசை கன்றி போய் இருந்தது தெரிந்தது. 'தொடர்ந்து அடித்து வந்ததால், சிறுமிக்கு உள்காயம் ஏற்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் தசை சிதைந்துள்ளது. இதனால் ரத்தம் கசிந்து, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

PRSwamy
ஆக 01, 2024 20:01

உண்மையில் சித்தி ஆக இருக்கும். ஏனெனில் சித்திகள்தான் இந்த கொடுமைகளை செய்வார்கள். லாடம் அல்லது பஞ்சாப் கட்டிங் கொடுத்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும்.


kalyan
ஆக 01, 2024 09:20

கிரேக்க அறிஞ்சர் சாகிரட்டீசின் மனைவி பெயர் சாந்தபே . அவளும் சகிரிட்டிஸ் அவர்களை மிக கொடுமைப்படுத்தி இருந்தார் பெயாரிலாவது ஒற்றுமை


TSRSethu
ஜூலை 28, 2024 19:35

உண்மையில் அம்மாவா சித்தியா அல்லது தத்து எடுத்த பிள்ளையா ? குழந்தைகளை அடிப்பதை பார்த்தால் நமக்கேன் வம்பு என்று இருக்காமல் காவல்நிலையத்துக்கு 1098 க்கு போன் பண்ணி விடுங்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 28, 2024 16:39

பெயரை பாருங்கள் ..... சாந்தலட்சுமி ....அரக்கி என்று பெயர் வைத்து இருக்க வேண்டும்


எஸ் எஸ்
ஜூலை 28, 2024 13:33

இவளுக்கு போய் சாந்த லட்சுமி என்று பெயர்! கொடுமை! சைக்கோ!


Ramesh Sargam
ஜூலை 28, 2024 11:59

பொதுவாக தாய்மையை போற்றுவார்கள். போற்றுவோம். ஆனால் இப்படிப்பட்ட கொடூரமான தாயை எப்படி போற்றமுடியும்? சிறையில் இந்த கொடூர பெண்ணை கொடூரமாக தண்டிக்கவேண்டும்.


Muthukumar
ஜூலை 28, 2024 11:14

கல்வி வியாபாரமாகி போனதே இதற்கெல்லாம் காரணம்


aaruthirumalai
ஜூலை 28, 2024 10:57

சுயநலத்தால் தமிழ் குடும்பங்களின் அடிப்படை அமைப்பு மாறிவிட்டன அதனால் ஏற்படும் விளைவுகள்தான் இவை.


தமிழ்வேள்
ஜூலை 28, 2024 10:51

திராவிட வாத்தியார்களுக்கே கல்வி பற்றிய புரிதல் இல்லை...மார்க் வாங்குபவன் மட்டுமே மஹாத்மா....மற்றவன் எந்த விதமான திறமைகள் இருந்தும் விளங்காத பயல் என்ற ஒரு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.... அவர்கள் முதலில் திருந்த வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 10:16

கொலை வழக்காக ஏன் மாற்றவில்லை? தாயார் மீது போலீசுக்கும், நீதிபதிக்கும் ரொம்ப கருணை போலிருக்கிறதே? தாயாரின் வயதுதான் காரணமா ????


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை