உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் மீண்டும் ஓட்டுப்பதிவு: அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

கோவையில் மீண்டும் ஓட்டுப்பதிவு: அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை லோக்சபா தொகுதியில், நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கவும், அதுவரை தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கோவை நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றுகிறேன். லோக்சபா தேர்தலில் என் ஓட்டை பதிவு செய்ய, கடந்த 13ம் தேதி இந்தியா வந்தேன். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் என் பெயர், மனைவி பெயர் இருந்தது.

புகார் அனுப்பினேன்

இந்த லோக்சபா தேர்தலுக்காக தயாரான வாக்காளர் பட்டியலில், என் பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், என் மகள் பெயர் இடம் பெற்றுள்ளது. கோவைக்கு, 15ம் தேதி வந்ததும், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன்.எங்கள் பகுதியில் வசிக்கும் பலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவுக்கு சென்றவர்களில், ஆயிரக்கணக்கானோர் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த 2019, 2021 தேர்தலின் போது, எங்கள் பெயர்கள் இருந்தன. 2024 தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில்தான், எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், ஓட்டுரிமையை நாங்கள் இழந்துஉள்ளோம்.

தடை வேண்டும்

ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4ல் நடக்க உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களை சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவரை நீக்குவதற்கு முன், சம்பந்தப் பட்டவருக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கி, முழுமையான விசாரணை நடத்தப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த விசாரணையையும் அதிகாரிகள் நடத்தவில்லை.நான் அனுப்பிய புகார், தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை, கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SRINATH
ஏப் 28, 2024 10:31

I do not know why BJP is not filing the suit? Why this Inertia? Similarly there is a big deletion of Voters in Central Chennai The supreme court should order CBI enquiry and sentence all those involved to prison and remove them from government payroll The staff involved are state government staff The election commissioner - Tamil Nadu owns moral responsibility and he must be retired for keeping a blind eye to this doctoring of Voters list giving an impression that he is also a party for this corrupt practice By these type of mischief the constitutional rights of a citizen is being denied He should no longer continue in TAMIL NADU


J.V. Iyer
ஏப் 28, 2024 08:17

இதை பல இடங்களில் தமிழகத்தில் செய்யவேண்டும் ஏமாற்றுக்காரர்கள்


Kasimani Baskaran
ஏப் 28, 2024 08:15

எதிரணியிருக்கும் பூத் முகவர்களைக்கூட சரிக்கட்டி / கவனித்து / மிரட்டி வேலை செய்து இருக்கிறார்கள் அந்த அளவுக்கு பயம் அண்ணாமலை ஜெயித்து டெல்லி சென்றால் தமிழக திட்டங்களுக்கு ஆதரவு தரத்தான் செய்வார் தோற்று தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டால் அது தீம்காவுக்கு தீராத தலைவலி ஆக தீம்காவினருக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை போல


sankaranarayanan
ஏப் 28, 2024 08:01

உச்ச நீதி மன்றமே முன்வந்து தானாகவே இந்த வழக்கை எடுத்து முதலில் மறுவாக்குப்பதிவு நடக்க உத்திரவு இடவேண்டும் இரண்டாவது வாக்குபதிவில் இருந்து சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது எப்படி என்று முழு விவரம் மத்திய புலனாய்வு ஆராய வேண்டும் காரணமானவர்களை பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும் தயக்கமே இல்லாமல் பாரபட்சம் இல்லாமல் நியாயமாக தாமதம் இல்லாமல் விசாரணை முடிக்க வேண்டும்


ராஜ்குமார்
ஏப் 28, 2024 03:00

இது போல ஆயிரக்கணக்கான மக்கள் நீதி மன்றத்தில் முறையிட்டால் விட்டுப்போன வாக்காளர்கள் ஓட்டுப்போட மறு சந்தர்ப்பம் வழங்கப்படலாம். சாய் தீபக் போன்ற வக்கீல்கள் கொஞ்சம் முன்வந்து மக்களுக்காக வாதாட வேண்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி