உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லா மின் சேவைக்கும் இனி ஒரே இணையதளம்

எல்லா மின் சேவைக்கும் இனி ஒரே இணையதளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் சாதனங்கள் இடமாற்றம் என, அனைத்து மின்சார சேவைகளுக்கும், மின் வாரியத்தின், www.tangedco.org இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, அந்த இணையதளத்திற்கு சென்று, 'ஆன்லைன் சர்வீஸ்' என்ற பகுதியை தேர்வு செய்து, விண்ணப்ப பகுதிக்கு செல்ல வேண் டும். அதை தேர்வு செய்ய பலர் சிரமப்படுகின்றனர்.எனவே, அனைத்து மின்சார சேவைகளுக்கும் விண்ணப்பிக்க, app1.tangedco.org/nsconline/ என்ற புதிய இணையதள முகவரியை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த இணையதள முகவரிக்கு சென்றதும், நேரடியாக மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மே 21, 2024 09:10

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வேலூரில் மூன்று நீர்த்தேக்க மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுகிறது. அதனையும் இந்த வலைத்தளத்தில் பெருமையாகக் குறிப்பிடுங்கள்.


Srinivasan Ramabhadran
மே 21, 2024 08:23

அரசின் பல்வேறு துறை சேவைகளை பயன்படுத்த, இணையவழி தளங்கள் இருக்கின்றன. பொதுமக்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், விண்ணப்பம் செய்து விட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை "சந்தித்து" கப்பம்/ கிஸ்தி/ வரி/ வட்டி எல்லாம் கட்டிய பின்னர் தான் உங்கள் வேலை நடக்கும் அதுவரை, உங்கள் மனு "விளக்கங்கள்" பெறுவதற்காக நிலுவையில் பெண்டிங் வைக்கப்படும் இல்லையென்றால், நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் ஒரு பயனும் இருக்காது கால விரதத்திற்கு பயந்து, எல்லோரும் தேவையான பூஜையை செய்ய வேண்டிய நிர்பந்தம் அண்மையில், எங்கள் குடியிருப்பில் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அதற்காக புதிய கழிவுநீர் குழாய் பதிக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தை அணுகினோம் இந்த வேலைக்காக இந்த பகுதியின் நகர மன்ற உறுப்பினர் ஒரு "பெரிய தொகை" கேட்கிறார் அதை கொடுக்க இயலாமல் கழிவுநீர் சாக்கடை பிரச்னையுடன் வாழ்ந்து வருகிறோம்


சிந்திப்பவன்
மே 21, 2024 08:10

கவலைப்படாதீர்கள் விரைவில் கையூட்டு பணத்தையும் டிஜிட்டல் முறையில் online செலுத்த வசதிகள் செய்யப்படும்


Senthoora
மே 21, 2024 07:02

அதானியா, அம்பானி இணையதளமா?


Varadarajan Nagarajan
மே 21, 2024 06:49

எந்த இணையதளத்திற்கு சென்று சேவைகளைப்பெற பதிவு செய்தாலும் அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம்தான் கோரப்பட்ட சேவையை வழங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேட்கும் லஞ்சம் கொடுத்தால்தான் சேவையை பெறமுடியும் என்ற நிலை மாறுமா? இதற்க்கு என்ன தீர்வு?


gobinath
மே 21, 2024 10:03

அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்குடன் பொது வெளியில் இந்த கருத்தை பரப்புகிறீர்கள் என்று கூறி வழக்கு பதிவு செய்தாலும் செய்வார்கள் ஜாக்கிரதை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை