உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய சாப்ட்வேரில் தொழில்நுட்ப கோளாறு

புதிய சாப்ட்வேரில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை:நிலங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு களை நிர்ணயிப்பதற்கான மென்பொருளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:நில வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை மாற்றி அமைத்து வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க அறிமுகப்படுத்தப்பட்ட சாப்ட் வேர் முறையாக செயல்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில், பல்வேறு சர்வே எண்களுக்கு புதிய மதிப்புகளை இணைத்த பின், அடுத்த நிலைக்கு செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் இணைக்கப்பட்ட மதிப்பு களும் காணாமல் போகின் றன. இதனால், மேலதிகாரிகள் தெரிவித்த காலக்கெடுவுக்குள், இப்பணிகள் முடியுமா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை