உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு

கோவை: வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அ.தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.https://www.youtube.com/embed/lGS73CU6ReMஇவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், தன் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இது, அவரது வருவாயைக் காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். இதற்கிடையே, கோவையில் இன்று காலை முதல் அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

TRE
மார் 19, 2025 12:06

ஆதாரம் இல்லாமல் எல்லாம் போட்டுகுடுக்கமாட்டாங்க ஆதாரத்தோடு தான் போட்டு கொடுத்து இருக்காங்க எதுக்கும் ஏ பி


RAMESH
பிப் 25, 2025 18:02

எங்க வார்ட் கவுன்சிலர் சொத்து பல கோடி...,கூலி வேலைக்கு போய் கொண்டு இருந்த உபீபீ..,...


RAAJ
பிப் 25, 2025 16:50

தற்போதைய செய்தி சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு ...... மின்சார வாரியம் மாபெரும் கடல் அண்டார்டிகா கண்டம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிவிடலாம் ஆனால் மின்வாரிய ஊழல் முறைகேடுகளை கண்டு பிடிக்க முடியாது.


என்னத்த சொல்ல
பிப் 25, 2025 11:52

திமுக வழக்கு போட்டது என்றால் ஆதாரம் இல்லாமல் போட மாட்டார்கள். முன்னாள் முதல்வரையே ஜெயிலுக்கு அனுப்பியவர்கள்.


Mani . V
பிப் 25, 2025 10:47

அப்ப, ஆளும் கட்சி மந்திரிகள் எல்லாம் யோக்கிய சிகாமணிகள், அப்புடித்தானுங்களே ஆபீஸர்ஸ்?


Kasimani Baskaran
பிப் 25, 2025 10:37

அதான... ஊழலுக்கு நாங்கள்தான் முழு குத்தகையும் எடுத்து இருக்கிறோம்... பங்காளி என்றாலுமே கூட ஊழல் செய்ய விடமாட்டோம்...


ஆரூர் ரங்
பிப் 25, 2025 10:36

இப்போதைய அமைச்சரவையில் பசையுள்ள துறைகள் முன்னாள் அதிமுக ஊழல் பெருச்சாளிகளிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே அம்மன் அர்ஜுனனுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. அட்வான்ஸ் கன்க்ராட்ஸ்.


VSMani
பிப் 25, 2025 10:34

2 கோடி 3 கோடி எல்லாம் ஒரு கவுன்சிலர் லெவல். MLA என்றால் 200 கோடி 300 கோடி லெவல்.


Haja Kuthubdeen
பிப் 25, 2025 10:05

இதற்கெல்லாம் அஇஅதிமுக அஞ்சாது....


மாபா
பிப் 25, 2025 10:04

பாத்துக்கலாம்