உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள் : டி.என்.பி.எஸ்.சி, அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள் : டி.என்.பி.எஸ்.சி, அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் 4 தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 23 வகையான பதவிகளுக்கு 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ) தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை