உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!

ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பசுக்களுக்கு தீவனம் மற்றும் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்குவதும் வழக்கம். இன்று (ஆகஸ்ட் 4) ஆடி அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் கடற்கரையில் மக்கள் குவிந்தனர்.அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, புஷ்ய மண்டப படித்துறையில், ஆடி அமாவாசை முன்னிட்டு, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.* மதுரை வைகை ஆற்றில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.* திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையிலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பேர் தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர்.* திருச்செந்தூர் கோவில் கடற்கரை, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கன்னியாகுமரி, கோவை நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோர் முன்னோர் வழிபாடு செய்ய கூட்டம் அலைமோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Velan Iyengaar
ஆக 04, 2024 15:04

இங்கு கதறல் தான்.... ஒரே கதறல் ...புலம்பல் தான் ....இப்படி தான் தமிழர்கள் சங்கிகளை புலம்ப விடுவார்கள் ஒவ்வொரு தேர்தலிலும்.... ரொம்போ சாதாரண விஷயம் புரியாமல் இப்படி புலம்பவிடுவது தான் தமிழர்கள் ஸ்டைல்... திராவிட மாடல் ஸ்டைல் .....மதத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்த முன்னோடி சமூகம் ... முற்போக்கான யோகம் ....நியாயமான சமூகம் ....நேர்மையான சமூகம் .... bj கட்சிக்கு இந்த அடிப்படை விஷயத்த பலமுறை சொல்லிக்கொடுத்த முற்போக்கான சமூகம் தான் தமிழ் சமூகம் ......


எஸ் எஸ்
ஆக 04, 2024 13:48

இவ்வளவு நம்பிக்கை உள்ள மக்கள் எப்படி திமுக வுக்கு மீண்டும் மீண்டும் வாக்கு அளிக்கிறார்கள்? ராமர் இருந்ததற்கு ஆதாரம் இல்லை என்று எப்படி ஒரு மந்திரி தைரியமாக பேச முடிகிறது?


Velan Iyengaar
ஆக 04, 2024 14:59

ரொம்போ சிம்பிள் ..மதத்தையும் அரசியலையும் எப்போதும் தமிழர்கள் தனி தனியாக தான் பார்ப்பார்கள்.. அறிவு அதிகம் ... வடக்கு மாதிரி மூடர்கள் இல்லை.... திராவிட சிந்தனை ... முற்போக்கான சிந்தனை .....முன்னேறிய சிந்தனை ... பகுத்து பார்க்கும் சிந்தனை .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 21:08

மதத்தையும் அரசியலையும் எப்போதும் தமிழர்கள் தனி தனியாக தான் பார்ப்பார்கள்..


Thanu Srinivasan
ஆக 04, 2024 12:39

பித்ருக்களுக்கு அமாவாசை அன்று தர்ப்பபணம் செய்து மிகவும் முக்கியம்தான்.


Barakat Ali
ஆக 04, 2024 11:30

இப்படி அக்கறையுடன் செய்யும் ஹிந்துக்கள், ஹிந்து விரோத அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்களே என்று சிலர் வருந்துகின்றனர்.. ஹிந்துக்களில் பலர் அனுஷ்டானங்களை தவறாமல் செய்தாலும் அவர்களுக்குத் தங்கள் சடங்குகள் மீது நம்பிக்கையுடன் கூடிய பிடிப்பில்லை.. ஆர்வமும் இல்லை.. கடனே என்றுதான் செய்கிறார்கள். காரணம் அதன் முக்கியத்துவம், அவசியம், செய்தால் என்ன பலனென்று, செய்யாவிட்டால் என்ன பாதிப்பென்று பற்றி அவர்கள் உணர்த்தப் படவில்லை. உங்கள் தர்மத்தின் பெருமைகள் அவர்களுக்குத் தெரியாது.. மடங்கள், சன்யாசிகள், பிராம்மணர்கள் ஆகியோரே இதற்குப்பொறுப்பு.. இப்போது சனாதனம் அழியும் ஆபத்து என்று புலம்புவோரும் இவர்களே.. இதற்கும் காரணம் சுயநலம் .....


Thanu Srinivasan
ஆக 04, 2024 12:42

சொல்வது உண்மையே


Velan Iyengaar
ஆக 04, 2024 15:00

அப்பட்டமான அமாவாசைக்கும் அப்துல் காதருக்குமான தொடர்பினை பார்க்கிறீர்களா ???


N.Purushothaman
ஆக 04, 2024 10:47

ஒரு பக்கம் அனுஷ்டானம் எல்லாம் செஞ்சிட்டு இன்னொரு பக்கம் காசு வாங்கிகிட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு ஓட்டு போட்டு தமிழகத்தையே நாசம் பண்ணிடுவாங்க நம்ம வாக்காளர்கள் ...காசு வாங்காமல் அந்த கட்சிக்கு ஓட்டு போடுறவங்களுக்கும் இது பொருந்தும் ...


தமிழ்வேள்
ஆக 04, 2024 10:32

சனாதன எதிர்ப்பு மற்றும் மதமாற்ற கும்பலை அழிக்க வேண்டும் என்றால் தமிழகம் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களாகவும் சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்க வேண்டும். பேசுவது தமிழாக இருந்தாலும் சோழ பாண்டிய கொங்கு மக்களின் பண்பாடு வழிபாடு வாழ்க்கை முறைகள் மாறுபாடுகள் கொண்டவை. தனித்தனியாக பிரிக்கப்படும் போதுதான் தேசிய மனநிலைக்கு வருவார்கள்.. இல்லை என்றால் திருட்டு திராவிடம் இவர்களை குடிகாரர்கள் கிரிமினல்கள் தேசவிரோதிகள் ஆக்கி அழிவை நோக்கி தள்ளி விட்டு தாங்கள் மட்டும் பணமூட்டைகள் ஆகி வெளிநாடு ஓடிப்போய் விடும்..சிலோன் தமிழன் போல இந்திய தமிழனும் விளங்காமல் போய் விடுவான் திராவிடம் அழிந்து தேசியம் செழிக்க தமிழகம் பிரிக்கப்படுவது அவசியம்....


nv
ஆக 04, 2024 09:34

இந்த கூட்டம் சரியாக வாக்கு அளித்தால், sanathanathai எதிர்க்கும் கூட்டத்தை அழித்து விட முடியும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை