உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை ஏமாற்றுகிறார் ஆனந்த்: தந்தை சந்திரசேகர் குற்றச்சாட்டு

விஜயை ஏமாற்றுகிறார் ஆனந்த்: தந்தை சந்திரசேகர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தன் மகன் விஜயை, புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றுவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் துவக்கியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு, பிப்., மாதம் 2ம் தேதி விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதுவரை கட்சி பதிவு செய்யப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. கட்சிக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, மொபைல் போன் செயலியும் மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது.ஒரே வாரத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், உறுப்பினர் சேர்க்கை என்னவானது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இது, ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திஉள்ளது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜயை ஏமாற்றுவதாக, விஜயின் தந்தை சந்திரசேகர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், சந்திரசேகர் கூறியிருப்பதாவது: புஸ்ஸி ஆனந்த், ஒரு சமூக வலைதள பக்கத்தை வைத்துள்ளார். இதில், விஜய் உட்பட 50 பேர் உள்ளனர். அதில், கட்சிக்காக புஸ்ஸி ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப்படுகின்றன. அதை பலரும், 'லைக்' செய்கின்றனர். இதை பார்த்து, புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். விஜயை ஏமாற்றுகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது; உரிய நேரத்தில் விஜய் பதில் அளிப்பார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
ஏப் 02, 2024 15:04

இவங்க வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு..


Lion Drsekar
ஏப் 02, 2024 14:08

குழந்தைகள் பெரியவர்கள் சொல்லி கெட்டகாலம் மலையேறி விட்டது இன்று எல்லாமே தலைகீழாக செயல்படுகிறது பள்ளி, கல்லூரி, அலுவலகம், சமுதாயம் எங்கு சென்றாலும் எல்லாமே தலைகீழாக இருக்கிறது இதில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் பெற்றுவிட்டதால் நமக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை, அப்படியே உரிமை கொண்டாடினாலும் அவர்கள் காவல் நிலையம் நீதிமன்றம் என்று நம்மை அவமானம் மட்டும் செய்வதில்லை, சமுதாயத்தில் தலைகுனிவையும் ஏற்படுத்தும் நிலை உருவாகிவிட்டது, இது காதல் திருமனாக இருந்தாலும், இருக்கும் சொத்தை பாதுகாக்க தவறும் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பல கோடி வைத்திருந்த என்னுடைய நெருங்கிய நண்பராகவும் இருந்த திரு எம் எ எம் ஐயா கடைசி காலத்தில்?? சரித்திரத்தில் நாம் படித்த திரு எம் கே டி, தங்கத்தட்டில் சாப்பிட்டவர்?? யாரை குறை கூறுவது ? நம் வளர்ப்பையா? காலத்தின் கோலத்தையா ? சமூக விரோதிகளின் கைகளில் இன்றைய சமுதாயத்தின் நிலையா? யாராலும் எதையுமே தீர்மானிக்க முடியாத அளவுக்கு இன்று சோதனையும் வேதனையும் தலை விரித்து ஆடுகிறது அண்ணா நகரில் பல கோடிக்கு அதிபதி இரண்டு பெண்கள் அவர்கள் அமெரிக்காவில் படித்தவர்கள் வீட்டு மாடியில் நீச்சல் குளம் சுகி வண்டியில் வந்து சாப்பாடு போடும் பையன்தான் எங்களது கணவர்கள் என்று இரு பெண்களும் ஒரு காலில் நிற்கிறார்கள்?? ஒரு மருத்துவர் வீட்டு வேலைக்கு வந்த மரவேலை செய்பவர்தான் என் கணவர் என்று கூறி திருமணமே செய்து கொண்டு விட்டார் அவர்களது பெற்றோர்கள் என்னிடம் அழுதபோது நாம் கேட்டேன், அதற்க்கு அந்த பெண் மருத்துவர் கூறியது நான் என் கணவரை சமுதாயத்தில் இன்டீரியர் டெக்கரேட்டர் என்று கூறுவேன் என்று கூடினார் இன்றைக்கு எல்லா நிலைகளிலும் ஏழை முதல் மிகைப்பணக்காரர்கள் வரை உள்ள எல்லா குடும்பத்தினர்களும் இன்று சந்தித்து வரும் கொடுமையான சோக நிலை இதுதான் இன்று திரையுலகுக்கு இந்த செயல்பாடு ஊடுருவி விட்டது ஒரு தந்தையாக அதுவும் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தும் போதே அதற்காகவே படம் எடுத்து வளர்த்து எதிர்பார்த்த நேரத்தில் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகள் இவரது வாழ்விலும் நடந்தது பெற்றோர் என்கிற முறையில் நமக்கு சோகத்தை உருவாக்குகிறது என்றைக்குமே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கேடு விளைவிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் விதியை மதியால் வெல்லலாம் உணர்ந்து செயல்பாட்டால் தன்னையும் தனது தியாகத்துக்காக கிடைக்கக்கூடிய பயனையும் அனுபவிக்கலாம் கன்ஷிராம் , புரட்சி செல்வி, ,மம்தா பேகம் பல உதாரணங்கள் உணர்ந்து செயல்பட்டால் நல்லது, வந்தே மாதரம்


Ramaraj P
ஏப் 02, 2024 10:53

படத்தில் பார்ப்பது போல் நேரில் இல்லை. ஆனால் அஜீத் படத்தில் இருப்பதை விட நேரில் கெத்தாக இருப்பார்??


பிரேம்ஜி
ஏப் 02, 2024 08:23

ஆனந்த் விஜயை ஏமாற்றுகிறார். சரி. விஜய் மக்களை ஏமாற்றுகிறார். அவ்வளவுதான்.


Suresh sridharan
ஏப் 02, 2024 07:56

அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது ஏனென்றால் விஜய் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிறைய விஷயங்கள் செய்யலாம் ஆனால் அவரும் ஜாதி மதம் என்று சொல்லி செல்ல தொடங்கி விட்டார்


ராமகிருஷ்ணன்
ஏப் 02, 2024 06:51

மகனை வச்சு சம்பாதித்து பத்தலே உனக்கு. அரசியலுக்கு வந்து இன்னும் பெருசா சுருட்டி ஏப்பம் விட பிளான் பன்றே. வேணா.


குமரி குருவி
ஏப் 02, 2024 06:00

சரி...சரி...ஒரமாக உட்காந்து குமுறலாம்...


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி