உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் மனம் இல்லை: ஸ்டாலினை வறுத்தெடுத்த அன்புமணி

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் மனம் இல்லை: ஸ்டாலினை வறுத்தெடுத்த அன்புமணி

தஞ்சாவூர்: ''மூன்று முறை ஜாதிவாரி கணகெடுப்பு நடத்த வாய்ப்பு கிடைத்தும், சிலரின் சதியால் தமிழகத்தில் நடத்தப்படவில்லை,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில், சோழ மண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாடு நேற்று நடந்தது.

யாரும் எதிரி இல்லை

இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:இங்கு நடக்கும் மாநாடு டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மே. 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நமக்கும் யாரும் எதிரி இல்லை.ஏழ்மை, அறியாமை, மது, போதை தான் நமக்கு எதிரி. இதை அழிக்க வேண்டும் என போராடி வருகிறோம். தி.மு.க., இரண்டு சமுதாயத்தை பிரித்து ஆட்சிக்கு வருகிறது. அதனால், நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், நாங்கள் கேட்பது, ஜாதிவாரி கணகெடுப்பை நடத்தி, நுாறு சதவீத மக்களுக்கும் இட ஒதுக்கீட்டை வழங்குங்கள் என்பது தான். தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் ஜாதிவாரி கணகெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீடு மட்டுமில்லை. சமூக நல திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர். இது தான், தமிழகத்திலும் நடக்க வேண்டும். ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். தற்போதைக்கு அதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை என்றாலும், அதை விரைவில் உருவாக்குவோம். தமிழகத்தில், அனைத்து பின்தங்கிய சமூகத்தவரையும் ஒன்று சேர்த்து, தமிழகத்துக்கு தேவையில்லாத தி.மு.க., ஆட்சியை வீழ்த்துவோம். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும். கருணாநிதிக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மனமிருந்தது. அதனால் தான் ராமதாசுடன் இணைந்து சமூக நீதிக்காக நிறைய விஷயங்களை செய்தார். ஆனால், அவர் மகன் ஸ்டாலினுக்கு அதிகாரம் இருந்தும் மனம் இல்லை. மனிதனுக்கிடையே உள்ள ஜாதியை அகற்றவே போராடுகிறோம். பின் தங்கியவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்றால் ஜாதி ஒழியும். பா.ம.க., அனைத்து ஜாதியினருக்குமான பொதுவான இயக்கம். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு பாதுகாப்பான இயக்கமாக இருப்பது பா.ம.க., தான். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்தது நிர்பந்தம் கொடுத்தது பா.ம.க.,தான். ஆனால் விவசாயிகள் ஏன், பா.ம.க.,வுக்கு ஓட்டளிக்க மறுக்கின்றனர் என புரியவில்லை.

ஏற்றத்தாழ்வு

பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இந்தியாவில், 4,694 ஜாதிகள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 364. இந்த 364 ஜாதிகளும் முன்னேறினால் தான், தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. இதனால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்கிறோம்.மூன்று முறை ஜாதிவாரி கணகெடுப்பு நடத்த வாய்ப்பு கிடைத்தும், சிலரின் சதியால் நடைபெறவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு; நீதிமன்றங்கள் குறுக்கீடு இல்லை. இருந்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடக்கவில்லை; தமிழகம் தயங்குகிறது.இவ்வாறு அவர்கள் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Biden
பிப் 24, 2025 13:51

யோவ் மரம் வெட்டி ஜாதி வெறி புடிச்ச


Suppan
பிப் 24, 2025 11:30

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ...ஓங்கோல் வம்சம் என்னாகும் ? இசை வேளாளர் என்று தாங்களே பெயர் சூட்டிக்கொண்டவர்கள் பாடு திண்டாட்டம்.


Muralidharan raghavan
பிப் 24, 2025 10:39

அரசியல்வாதிகள் மக்களை பின்னோக்கி கொண்டுசெல்ல முயல்கிறார்கள். எத்தனைகாலம்தான் ஜாதி, இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு என அரசியல் செய்வார்கள் என்று தெரியவில்லை. நாடுமுழுவதும் மத்திய, மாநில அரசுகளில் ஒரு பத்து கோடி வேலைவாய்ப்பு இருக்குமா? நாட்டில் 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லவா? இந்த பத்து கோடி பேருக்காக ஏன் ஜாதி அரசியல் செய்யவேண்டும். இன்று இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் குடி பழக்கம் புரையோடி கிடக்கிறது. எங்கும் ஊழல், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதை பற்றி எல்லாம் பேசாமல் ஜாதியை வைத்து அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது.


naranam
பிப் 24, 2025 08:27

அப்படியே ஜாதி வெறி கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தலாம்! திருட்டு திக முக திமுக பாமக ...


Palanisamy T
பிப் 24, 2025 08:22

3. அன்புமணி அவர்களே, யாரை மேடையில் அமர்த்திவிட்டு சாதியைப் பற்றி பேசியுள்ளீர்கள். ஒருவேளை நாளை நீங்களும் மருத்துவ அய்யா அவர்களும் எங்கள் ஊருக்கு வருகைத் தந்தாள் உங்களை தமிழராக வரவேற்ப்பதா, அல்லது வன்னியராக வரவேற்பதா தெரியவில்லை சாமி? பதில் சொல்வீர்களா?


Palanisamy T
பிப் 24, 2025 08:13

2. இனிமேல் சாதியில்லா தமிழ்நாடு, நல்ல தமிழர்களை உருவாக்கும் தமிழ்நாடு, உலகத் தமிழர்களுக்கெல்லாம் நல்ல வழிக் காட்டியாய் இருக்கும் தமிழ்நாடு நாளையே மலரட்டும். இருப்புறமும் நல்ல உறவுகள் மலரட்டும்.


Palanisamy T
பிப் 24, 2025 08:05

சாதி சாதியென்று ஏன் சாகிண்றீர்கள் செத்து மடிகிண்றீர்கள். சாதி பிறப்பால் ஏற்படுவதில்லை. ஒருவனின் ஆன்மீக சிந்தனையை உயர்வு தாழ்வுநிலையை வைத்துதான் உயர் சாதி தாழ்ந்த சாதி யென்று அன்றே நம் முன்னோர்கள் அறிந்தார்கள். ஹிந்து மதத்தவர்கள் சிலர் தங்களின் பச்சை சுயநலத்திற்காக இதை பிறப்பால் அறிமுகப்படுத்தினார்கள். அந்த சாதியால் ஹிந்துக்களிடையே ஏற்பட்டது தான் இன்றைய உயர்வு தாழ்வு, வெறுக்கத்தக்க தீண்டாமை. ஹிந்துக்களிடையே ஒற்றுமையை சீரழித்து பிளவை உண்டுப் பண்ணியதும் இந்த சாதிகள்தான். அதைதான் பெரியார் எதிர்த்தார். எல்லைமீறிச் சென்று ஹிந்துக்களையே சீண்டினார் கடவுளே இல்லையென்றார். இனிமேல் உங்களுக்கு ஒட்டுப் பொடுகின்றவன் சிந்திக்கவேண்டும். இந்த உயர்வு தாழ்வு சாதியைக் காட்டி மத மாற்றகும்பல் நன்றாக பயன் படுத்தினார்கள். போதும் சாமி, தமிழக மக்களை தமிழர்களாக வாழவிடுங்கள் .நாளைக்கு நாடும் நல்லாயிருக்கும். உலகில் தமிழர்களும் நல்லாயிருப்பார்கள். நீங்களும் உங்கள் வம்சமும் நல்லாயிருக்கும். இந்த விஷயத்தில் முதல்வரின் உறுதியை போற்றதான் வேண்டும்.


GMM
பிப் 24, 2025 07:44

காதலுக்கு சாதி இல்லை என்ற பாடல் வரி உண்டு. ஏழ்மைக்கும் சாதி இல்லை. இட ஒதுக்கீடு சாதி மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் கேட்டால், வரி விதிப்பு சாதி எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் 364 சாதியாம் .பின் ஏன் கல்வி, வேலை , அரசியலில் 4 , 5 சாதிகள் மட்டும் பெற்று வருகின்றன. வாக்கு மந்திரம். 360 சாதியை முன்னேற்றவில்லை . மேலும் சாதியில் நிலைத்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. கிருத்துவ வன்னியர், நாடார், தலித் ..என்று பல உண்டு. ராமதாஸ் சாதியை வளர்க்க ஒருவருக்கு ஒருவர் உதவும் முறை மூலம் ஒற்றுமை ஏற்படுத்தினால் போதும். பிறர் உழைப்பை சுரண்ட வேண்டாம்.


Kasimani Baskaran
பிப் 24, 2025 06:44

மத்திய அரசு மனது வைத்தால்க்கூட முடியாது ஐநா சபை பாதுகாப்பு சபை நினைத்தால்தான் முடியும் என்று உடன்பிறப்புக்களே சொல்வார்கள்.


அப்பாவி
பிப் 24, 2025 06:34

சாதி இல்லேன்னா இவிங்க பொழப்பே ஓடாது.