உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாதுரை பிறந்த நாள் கட்சியினர் மரியாதை

அண்ணாதுரை பிறந்த நாள் கட்சியினர் மரியாதை

சென்னை: தமிழகம் முழுதும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 116வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலை அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்எல்.ஏ.,க் கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.அதேபோல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.ம.மு.க., கட்சியினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர், அண்ணாதுரை படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுதும் அரசியல் கட்சியினர், அண்ணாதுரை சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ