உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி; முதல்வருக்கு அண்ணாமலை சவால்

2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி; முதல்வருக்கு அண்ணாமலை சவால்

கோவை: 'தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி' என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா பீளமேட்டில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் அலுவலகத்தை பார்வையிட்டார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், பா.ஜ., எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xs5jrr1g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கோவில் இது!

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா 5 வருடங்களாக நம்மை வழிநடத்தி கொண்டு இருக்கும் வேளையில், ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ., ஆட்சியை பிடித்து கொண்டு இருக்கிறது. அதற்கு முன், தேசிய தலைவராக இருந்த அமித்ஷா எல்லா மாநிலங்களிலும் பா.ஜ., அலுவலகம் இருக்க வேண்டும். அலுவலகம் கோவிலாக, வீடாக இருக்க வேண்டும். இதற்கு மக்கள் உரிமையோடு வர வேண்டும்.

கல், மண்

எல்லா பா.ஜ., அவலகத்திலும் நூலகங்கள் இருக்கிறது. நாம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் நமது மீது கல்லையும், மண்ணையும் வீசுகிறார்கள். பா.ஜ.,வின் வளர்ச்சி தமிழகத்தில் மக்கள் மனதில் எல்லாம் தங்க ஆரம்பித்துவிட்டது. எல்லா இல்லங்களிலும் நமது பிரதமர் மோடி குடியிருக்கிறார். எதிர்க்கட்சியினரால் மக்களிடம் பேச முடியவில்லை. அவர்களின் எந்தவொரு திட்டமும் மக்கள் பக்கத்தில் போக முடியவில்லை.

பரிசு கைது

பிரதமர் மோடி நடுத்தர மக்களுக்காக கஷ்டப்பட்டு யோசித்து மருந்தகத்தை ஆரம்பித்தால் தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால் காப்பி அடித்து முதல்வர் மருந்தகம் என்று ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். பிரதமர் மோடி தனது பெயரை எந்த திட்டத்திற்கு வைத்தது இல்லை. நாம் கடுமையாக பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். அதற்கு பரிசு கைது. ஒவ்வொரு நாளும் ஏதோ இடத்தில் பா.ஜ,வினர் கைது செய்யப்படுகிறார்.

2026ல் வீட்டிற்கு!

2026ல் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.,வினர் தெளிவாக இருக்கிறார்கள். வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இயக்கம் தி.மு.க., பட்டப்பகலில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம் போடுகிறார். ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறுகிறார். 3வது முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி துவங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் தமிழ் கெட்டுவிட்டது. தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

குட்டிக்கரணம்

முதல்வர் ஸ்டாலின் நடத்தும் சொந்த பள்ளியில் ஹிந்தி திணிக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நல்லா கே ட்டு கொள்ளுங்கள். தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அதுவரைக்கும் நீங்க குட்டிக்கரணம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மனிதன் எந்த வேலையும் இல்லை என்றால் எதையும் செய்ய துணிவார்கள் என்பதற்கு உதாரணமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.

ஒற்றுமை

அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுவிட்டார். 2026ல் மம்தா பானர்ஜியும், முதல்வர் ஸ்டாலினுடன் வீட்டிற்கு செல்ல போகிறார். அன்றைக்கு இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க தான் போகிறது. புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை. நம்மிடம் புதிய தலைவர், பழைய தலைவர் என்று வேறுபாடு இல்லை. ஒற்றுமையாக நாம் இணைந்து பாடுபட வேண்டும். கண் முன்னால் வெற்றி தெரிகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் அனைவரும் தீர்க்கமாக, கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

பொய் சொல்லலாமா

கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: விஜய் என்ன பேசுகிறாரோ அதனை முதலில் அவர் பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தைக்கு மட்டும் 3 மொழிகள். உங்கள் பள்ளியில் 3 மொழி கற்பிக்கிறீர்கள். ஆனால், தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் 2 மொழியா? விஜய் சொல்வதை அவர் முதலில் கடைபிடிக்க வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏன் பொய் சொல்கிறீர்கள். மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? எங்கும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Arachi
பிப் 28, 2025 22:50

அரசியல் என்னது என்று தெரியாத தருதல. தமிழ் நாட்டு அரசியலை தீர்மானிக்க தெரியாத ஒரு ட்ராப்அவுட் ஆபிசர். அர்த்தமற்ற பேச்சு இதில் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.


T.Gajendran
பிப் 28, 2025 19:37

ஐய்யா?? திமுக வீட்டுக்கு போவது இருக்கட்டும், அந்த இடத்துக்கு, பிஜேபி வரமுடியுமா?? கொள்கையில்லாதவன், உன் பின்னாடி, வருவான், ஊழலை ஒழித்து விடலாம், அந்த நம்பிக்கையிருக்கு, தமிழனிடம், ஆனால், உன் கொள்கையை, ஏற்கமுடியுமா, என் கொள்கை, மருதம், முல்லை, பாலை, நெய்தல், "என் மதம் சைவம், கௌமாறம், சமணம், புத்தம், உன் கொள்கை என்னா ஓரே நாடு, அகண்டபாரதம், ஒரே மதம் இந்து மதம், ஒரே மொழி இப்பொழுது இந்தி வருங்காலத்தில், சமஸ்கிருதம், அப்போ மேற்கண்ட, எங்க கொள்கைகள் என்னாவாகும், அதலால், கொள்கை மாறமாட்டோம், போயிட்டு வாங்க, சார்,


Dhanapalan Ganesan (HR)
பிப் 27, 2025 15:16

ஹ்ம்ம் ஒரு காட்டவே நாசமாக்கி சுதந்திரமாக வாழ்ந்துகிட்டு இருந்த மிருகங்களை விரட்டி விட்டுவிட்டு இப்போ நீங்கள் எல்லாம் அங்குபோய் பார்ட்டி பண்ணிட்டு வரீங்க..நீங்கள் எல்லாம் .. யாரு இந்த சாமியார் இவர் கிட்ட எப்டி இவளோ பணம் எவ்ளோ வரி கட்ராரு யாருக்காவது தெரியுமா . நீங்கள் எல்லாம் முதலில் உங்களையும் உங்களை சுற்றி உங்கள் நம்பியவர்களை முதலில் சரியாக இருக்க சொல்லுங்கள். அப்புறம் ஹிந்தி படிக்க சொல்றிங்க நல்ல விசயம் அப்டியே அந்த பக்கம் போய் 3 வது மொழியாக தமிழ் படிக்கணும்னு சொல்லுங்க.. அத சொல்லிட்டு இங்க வந்து பேசுங்க..


Sivagiri
பிப் 27, 2025 12:31

அப்பாடி நல்லவேளை எங்க, தீகாருக்குத்தான் அனுப்பீருவங்களோன்னு, பயந்து நடுங்கிட்டோம்.. நல்லவேளை... மறந்திட்டாங்க - கோவில் கோவிலாக ஏறி இறங்கிய புண்ணியம் தான்... தப்பிச்சாச்சு . . .


Mahendran Puru
பிப் 27, 2025 10:21

இந்துத்வ வியாபாரியின் திருவிழாவிற்கு வந்த உள்துறை அமைச்சர் வழக்கம்போல கட்டுக்கதை சொல்லி போயுள்ளார். ஆருத்ரா அ.மலையும் தன் பங்கிற்கு முழங்கியுள்ளார். மறுக்கப்படும் கல்வி நிதியை எப்போது பெற்றுத் தருவார்கள்? தொகுதி சீரமைப்பின் போது சென்ற முறையும் தென் மாநிலங்கள் குரல் எழுப்பியே சாதித்தார்கள். நமக்கு கிடைத்தது அதே 39. ஆனால் வட மாநிலங்கள் இருப்பதற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றனர். அவர்களுக்கு எவ்வளவு அதிகமாக கொடுக்கிறார்களோ அதே விகிதத்தில் அதிக இடங்கள் நமக்கு கிடைக்க வேண்டும்.


அப்பாவி
பிப் 27, 2025 08:48

2016 தேர்தலில் தேமுதிக கட்சி ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்னு அவிங்களோட கேப்டன் டி.வி சொன்பாங்க. எனக்கு மெய் சிலித்திச்சு. இப்போ அண்ணாமலை பேசுறதை கேக்கும்போதும் அதே மாதிரி மெய் சிலிர்க்குது.


ramesh
பிப் 26, 2025 21:41

இந்த வார்த்தையை ஒரு தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் சொல்லி இருந்தால் கூட கேட்டு கொள்ளலாம் .


நிக்கோல்தாம்சன்
பிப் 26, 2025 21:22

அவர் வீட்டுக்கு போனாலும் தவறை உணர்ந்து திருந்த ஒரு வழி சொல்லுங்க , திருந்தினால் 9 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செய்தார் என்பதனை சொல்ல வாய்ப்புண்டு , தமிழக கடனை அவர் 2026க்குள் அடைத்தால் தான் அவர் திருந்தி விட்டார் என்று நினைத்து கொள்வேன்


Shivam
பிப் 26, 2025 21:12

ஏப்பா மும்மொழி மூர்த்திகளா, எங்கே எங்க மண்ணின் மைந்தி வானதி அக்காவ காணோம். இருட்டடிப்பு செஞ்சிட்டீங்களா . நம்ம அமைச்சு முருகன நாலாந்தரமா டீல் பண்ணிட்டீங்களா ...


Ray
பிப் 27, 2025 07:42

முருகன் மதில் சுவருக்கு வெளியே நின்று வணங்குவார் போல


நிக்கோல்தாம்சன்
பிப் 28, 2025 20:59

பாபு குறித்து கருத்து போட போயிருக்காங்க போல


Ramesh Sargam
பிப் 26, 2025 20:20

ஒரேயடியாக ஓங்கோலுக்கே அனுப்பிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை