உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 47 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரம்

47 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரம்

சென்னை: சென்னை எழும்பூர், தாம்பரம் உட்பட, 47 ரயில் நிலையங்களில், 100 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தானியங்கி இயந்திரம் வாயிலாக முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.கொரோனா பாதிப்பின் போது, இந்த சேவை முடங்கியது. இதற்கிடையே, புதிதாக, 47 ரயில் நிலையங்களில் தானியங்கி, 'டிக்கெட் மிஷின்'கள் நிறுவ, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேற்று கூறியதாவது: சென்னை கோட்டத்தில் - 34; மதுரை - 16 உட்பட, ஆறு கோட்டங்களில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட டிக்கெட் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அடுத்த கட்டமாக, மேலும் 47 ரயில் நிலையங்களில், 100 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவ, இம்மாதம், 16ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தாம்பரம் - 6, எழும்பூர் - 4, பெரம்பூர் - 4, மாம்பலம் - 6, வேளச்சேரி - 5, கிண்டி - 5 தானியங்கி கருவிகள் நிறுவப்படும்.இது தவிர, திண்டிவனம், காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், பட்டாபிராம், மயிலாப்பூர், சேப்பாக்கம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, கும்மிடிப்பூண்டி, தரமணி, திருவொற்றியூர், அத்திப்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தேவைக்கு ஏற்றார் போல, ஒன்று முதல் மூன்று இயந்திரங்கள் வரை நிறுவப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Shekar
ஏப் 27, 2024 10:08

மும்பையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் அமுலில் உள்ளது, முன்பு prepaid card உபயோகிக்கவேண்டும், இப்போது ஐந்தாண்டுகளாக upi payment சேர்க்கப்பட்டுள்ளது மொத்தம் உள்ள உள்ளூர் ரயில்நிலையங்களிலூம் இந்த வசதி உண்டு இது இப்போது out-dated ஆகிவிட்டது, பெரும்பாலோர் UTS App பயன்படுத்தி சாதாரண மற்றும் சீசன் டிக்கட்டுகளை மொபைலில் வைத்துக்கொள்கிறார்கள்


Ramesh Sargam
ஏப் 27, 2024 09:55

அந்த தானியங்கி டிக்கெட் இயந்திரம் அருகே காவலர்களை பணிக்கு அமர்த்தவும் இல்லையென்றால் அதுவும் ஏதோ ATM என்று கருதி அந்த இயந்திரத்தையே திருடிக்கொண்டு போயிவிடுவார்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ