உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறும்

பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறும்

திருப்பூர்:''பா.ஜ., 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும்,'' என்று பா.ஜ., மாநில பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.திருப்பூரில் அவர் கூறியதாவது:தெலுங்கானா தேர்தல்பொறுப்பாளராக பணியாற்றினேன். சத்தீஸ்கர், குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தோம். அம்மாநிலங்களில், மக்கள் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக உள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜ., 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்.அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அம்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூன் 02, 2024 07:30

இந்துக்கள் மத வெறியை வாக்கு வங்கிக்காக தூண்டிவிட்டு வெற்றி பெறுவதில் வியப்பு என்ன உள்ளது அத்தகையவர்கள் பெரும்பான்மையாகிவிட்ட இந்நாட்டில்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை