உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பா.ம.க., கூட்டணி ஆட்சி: திருமண நிகழ்வில் அன்புமணி நம்பிக்கை

தமிழகத்தில் பா.ம.க., கூட்டணி ஆட்சி: திருமண நிகழ்வில் அன்புமணி நம்பிக்கை

அரக்கோணம் : ''தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்,'' என அன்புமணி பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி உதவியாளரின் திருமணம் நேற்று நடந்தது.மணமக்களை வாழ்த்தி அன்புமணி பேசியதாவது:தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., பணம் மற்றும் அதிகார பலத்தால் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் அது நடக்காது. 2026-ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், சேர்மன் பதவிகளை அதிக இடங்களில் கைப்பற்ற வேண்டும்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு சாதகமாகவே இருக்கும். இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்திற்கு 'நீட்' தேர்வு தேவையில்லாதது. சுகாதார அமைச்சராக இருந்த நான் சொல்கிறேன், இங்கு நீட் தேவையில்லை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. போலீசாருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. கலெக்டர், எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்களை கருப்பு புள்ளி பட்டியலில் வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அ.சகாயராசு
ஜூன் 18, 2024 19:20

ஒரு பாரமன்ற உறுப்பினரை தேர்வு செய்யமுடியவில்லை இவர் தமிழ் நாட்டை ஆழப்பார்க்கிறார்


paulson wesly
ஜூன் 18, 2024 17:52

முதலில் நீங்கள் ஒரு நிலையான கூட்டணி அமைத்து தெளிவாக இருங்கள்.தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாதீர்கள்.


Velan
ஜூன் 18, 2024 17:36

வாய்பு இல்லை


Velan
ஜூன் 18, 2024 17:34

வாய்பில்லை ராஜா


Sampath Kumar
ஜூன் 18, 2024 09:17

உங்க மாம்பழம்? பழுக்காது ஏன் என்றால் மாம்மரமே பூக்காது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை