மேலும் செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்
55 minutes ago
காரைக்கால் : காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் நிரவி புதிய பாலம் அருகில் உள்ள ஒயிட் ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிங்காரவேல். இவரது மகன் சந்தோஷ், 13; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.கோடை விடுமுறையை ஒட்டி வீட்டின் அருகே நண்பர்களுடன் சமீபத்தில் அவர் விளையாடிய போது, 15 வயது சிறுவனுடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மாயமான சந்தோஷை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.இதற்கிடையே, பிரச்னை செய்த சிறுவன் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சந்தோஷின் உடல் மீட்கப்பட்டது. விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.
55 minutes ago