உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போனுக்கு பதில் செங்கல்; டெலிவரி ஊழியர்கள் கைது

போனுக்கு பதில் செங்கல்; டெலிவரி ஊழியர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, அரும்பாக்கத்தில் 'பார்சல் சர்வீஸ்' நிறுவனம் நடத்தி வருபவர் நாராயணன். 38. இவரது நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு 'டெலிவரி' செய்யும் பொருட்களுக்கு பதில், செங்கல்லை வைத்து டெலிவரி செய்வதாக புகார் வந்தது.இதில், 10 லட்சம் மதிப்புள்ள 13 மொபைல்போன், ஒரு லேப்டாப் திருடப்பட்டது தெரிந்தது. சந்தேகமடைந்த நாராயணன், கடந்த ஜூனில் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, மாயமான மொபைல்போன்களின் ஐ.எம்.இ.ஐ., எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது, பார்சல் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டேரியைச் சேர்ந்த தினேஷ், 20, என்பவர் பயன்படுத்தியது தெரிந்தது.அவரை பிடித்து விசாரித்த போது, வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போன்களை டெலிவரி செய்ய செல்லும் போது, சிலர் வீட்டில் இருப்பதில்லை. அந்த பார்சலை பிரித்து மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு, அதில் கற்களை வைத்து, மீண்டும் நிறுவனத்தில் ஒப்படைப்பேன். வாடிக்கையாளர் கேட்கும் போது, வேறு ஊழியர் டெலிவரி செய்வதால், சந்தேகம் வரவில்லை என, போலீசில் தெரிவித்துள்ளார்.இதற்கு உடந்தையாக இருந்த, இவரது கூட்டாளியான அயனாவரத்தைச் சேர்ந்த அஜித், 25, என்பவரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நான்கு போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்புசாமிஹை
செப் 05, 2024 05:51

ஆன்லைன் வர்த்தகம் ஹை. டிஜிட்டல் புரட்சி ஹை. குத்துங்க மெடல் ஹை.


Ramesh Kumar
செப் 04, 2024 11:22

I did not see my opinion in your website


Ramesh Kumar
செப் 04, 2024 11:21

You did not Post my replies


Pandi Muni
செப் 04, 2024 09:00

உடனே தி.மு.க தலைமையை போய் பாருங்க திருட்டு பசங்களா, நல்ல எதிர்காலம் காத்திருக்கு


ramesh
செப் 04, 2024 09:43

ரவுடி மற்றும் நிதிநிறுவன கொள்ளையர்கள் அடைக்கலம் தேடி உங்கள் கட்சியில் தானே அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள் .தமிழிசை அவர்களே இதுகுறித்து பேசி உள்ளவர்களே


Kalyanaraman
செப் 04, 2024 07:54

குற்றவாளிகளும் குற்றங்களும் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தண்டனை அற்ற, நமது சட்டங்களும் நீதிமன்றங்களுமே.


krishnamurthy
செப் 04, 2024 09:06

கடுமையான தண்டனை மட்டுமல்ல அதுவும் விரைவாக தரப்படவேண்டும்


ramesh
செப் 04, 2024 09:47

சிறுபான்மையினருக்கு சலுகை எதிர் பார்க்கும் போது அரபுநாட்டில் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையையும் ஏற்க மனம் வரவேண்டும் .அந்த நாட்டில் உள்ள சட்டத்தை நம் நாட்டில் அனைத்துமக்களுக்கும் அமுல் படுத்தினால் மட்டுமே குற்றத்தை தடுக்க முடியும்


chennai sivakumar
செப் 04, 2024 07:25

அரபு நாடு போல தண்டனை கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும். ஆனால் அது நடக்காது


Ms Mahadevan Mahadevan
செப் 04, 2024 07:19

தனிமனித ஒழுக்கம் இன்மை நுகர்வு கலாசார பேராசை இவைகளால் இன்றைய இளைய சமுதாயம் சீரழிந்த்துவிட்டது. ஆரம்ம கல்வி கூடங்களிலேயே தனிமனித ஒழுக்கத்தை கற்று கொடுப்பது குறைத்தால் வந்த விளைவு


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 06:47

ஆஹா ஆஹா திராவிட மாடல் ஸ்ட்டாக்குகள்


Palanisamy Sekar
செப் 04, 2024 06:35

பேராசையால் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இந்த இளைஞர்கள் இனி வாழ்நாள் முழுக்க இப்படித்தான் சிந்திப்பார்கள். போன் இல்லை என்றால் பல உயிர்கள் இந்த மண்ணைவிட்டு காணாமல் போய்விடும்போல. நிறுவனத்தின் உரிமையாளர் இவர்களை நம்ம்ம்ம்பி மோசம் போய்விட்டார். பொறுப்பு அவருக்குண்டானது. அதனால் அவரும் தண்டனைக்கு உட்பட்டவர்தான்.


vadivelu
செப் 04, 2024 07:19

ஹா ஹா ஹா .. அவர் வாழ்க்கையை தொலைத்து விட்டாரா, இனி தான் அவர்களுக்கான அரசியல் கட்சிகள் தேடி பிடித்து கட்சியில் சேர்த்து வளர்ச்சியை கொடுப்பார்கள். நாளைய கட்சியின் தலைவராவார்கள்.


புதிய வீடியோ