உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணமில்லா பரிவர்த்தனை அரசு பஸ்களில் 100 % அமல்

பணமில்லா பரிவர்த்தனை அரசு பஸ்களில் 100 % அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அரசு விரைவு பஸ்களில், 100 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், சொகுசு மற்றும் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, 1,100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம் என்பதால், நடுத்தர மக்கள் அரசு விரைவு பஸ்களில் பயணிக்க விரும்புகின்றனர். அதனால், 'கூகுள் பே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு' வாயிலாக டிக்கெட் பெறும் வசதி மே மாதத்தில் துவங்கப்பட்டது. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: அதிநவீன டிக்கெட் கருவிகள் வாயிலாக, பணமில்லா பரிவர்த்தனை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், பயணியர் பிரச்னை இன்றி டிக்கெட் எடுக்க முடியும். குறிப்பாக, சில்லரை பிரச்னை இல்லாமல் இருக்கும்.அதேபோல, ஒரு டிக்கெட்டிற்கு பதிலாக, மூன்று டிக்கெட்டுகளை கிழித்து கொடுக்க வேண்டியதில்லை. கருவி வாயிலாக ஒரு டிக்கெட் மட்டுமே கொடுக்கப்படுகிறது. பயண தேதி, கட்டண தொகை, ஊர் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
ஜூன் 15, 2024 12:31

பணமில்லா பரிவர்த்தனையால் பத்து, இருபது ரூபாய் நோட்டுகளை பார்ப்பது குறைந்துவிட்டது... டாஸ்மாக் கடைகளுக்கு இது மாதிரி செய்யும் திட்டம் உண்டா?


Kundalakesi
ஜூன் 15, 2024 06:41

ரொம்ப தாமதமாக வந்தாலும் நல்ல திட்டம். சிங்கப்பூர் போல அட்டை மூலம் Tap and travel அட்டை வேண்டும். ஏறும் பொழுது அட்டையை மெஷினில் ஒரு தடவை தட்ட வேண்டும், இறங்கும் பொழுது தட்டினால் பயண இடைவெளி தூரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ