உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயினாருக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி., போலீஸ் முடிவு

நயினாருக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி., போலீஸ் முடிவு

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் ஏப்., 6ம் தேதி 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகி கோவர்த்தனன், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் ஆகியோரின் வீடுகளில், தாம்பரம் போலீசார் சோதனை நடத்தினர். சமீபத்தில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.

ஆஜராகவில்லை

இதையடுத்து, நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன், அவரது ஊழியர்கள் ஆசைத்தம்பி, ஜெயக்குமார் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர். இதில், ஜெயக்குமார் ஆஜராகவில்லை. மற்ற இருவரிடம் நேற்று முன்தினம் காலை 11:00 முதல் இரவு 8.30 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரத்தில் கைதானவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். தாம்பரம் போலீசாரிடம் கைதானவர்கள் கூறிய வாக்குமூலங்களின் அடிப்படையில் முருகன், ஆசைத்தம்பி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.துவக்கத்தில் இருந்து பணம் வந்த பின்னணி குறித்து இருவருமே பதில் அளிக்கவில்லை. தங்களுக்கும் பணம் பிடிபட்ட சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே பதிலாக தந்தனர். வேறு எதுவும் தெரியாதுவிசாரணையின் போது முருகன் கூறுகையில், 'நான் நயினாரின் உறவினர். அந்தப் பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நயினாரின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு, 'சென்னையில் இருந்து நெல்லைக்கு பொருள்களை கொண்டு செல்ல இரு உதவியாளர்கள் வேண்டும்' என்று கேட்டார்.'நானும் ஆட்களை அனுப்பி வைத்தேன். மற்றபடி, எனக்கு வேறு எந்த தகவலும் தெரியாது' என்று கூறியுள்ளார். ஆனால், கைதானவர்களிடம் தாம்பரம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தையும், முருகனின் வாக்குமூலத்தையும் ஒப்பிடும் போது சில தகவல்கள் முரண்படுவது தெரிகிறது. அடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ravi Kulasekaran
மே 04, 2024 13:31

சரியான ஆதாரங்களை கண்டு பிடிக்க முடியாது ஏன் என்றால் அவர் அவ்வளவு கட்சி கோட்பாடுகளை மீறி செயல்பட திராவிட மாடல் கட்சி கிடையாது பாஜக


MADHAVAN
மே 04, 2024 11:03

இவன் கொள்ளை அடித்தது ஏகப்பட்டபனம், மாட்டி இருப்பதோ கடுகளவு, அதிமுக ல இருந்து பிஜேபி கு போன எல்லாம் இப்படி கொள்ளை அடிச்ச பணத்தை சேப்டி பண்ணத்தான்,


Sampath Kumar
மே 04, 2024 09:40

அனுப்பி அடுத்த செந்தில் பாலாஜி கேஸ் மாதிரி ஜவுவாக இழுத்து தேர்தலில் இவரு செய்கிறவரைக்கும் பார்த்து விட்டு செய்தல் கேஸ் இல்லாமல் போக ட்ராமா என்னவென்று மக்கள் நன்கு அறிவார்கள்


Duruvesan
மே 04, 2024 10:37

, விடியல் இன்னும் ஆட சொல்லு எம்பெருமான் ஈசனின் ஆட்டத்தை பார்க்க தானே போறே அப்போ நீ கும்பிடற கடவுளும் விடியல் கும்பிடற கடவுளும் விடியலை கை கழுவிடுவார்


Godfather_Senior
மே 04, 2024 09:22

நடத்துங்க, நடத்துங்க இன்னும் ஒரு ரெண்டு அல்லது மூணு மாசம் உங்களுக்கு வேட்டையாட முடிஞ்சா அளவுக்கு ஆடுங்க ஆனா அதுக்கப்புறம் நீங்கள் எல்லாருமே வேட்டையாடப்படுவீர்கள்.... தப்பிக்க முடியாதபடி இப்பவே எல்லா அடிப்படை வேலைகளையும் மத்திய அரசு தயாரா வெச்சிருக்கும் என தெரியுது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை