உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நியமனத்தில் மத்திய அரசு துரோகம்

அமைச்சர் நியமனத்தில் மத்திய அரசு துரோகம்

மத்திய, மாநில அரசுகள், காவிரி மற்றும் மேகதாது பிரச்னையில், தொடர்ந்து கபட நாடகம் ஆடுகின்றன. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொடர்ந்து துரோகம் செய்வதையே, தி.மு.க., அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்து வந்தன. போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ., கூட்டணி அரசும், கங்கணம் கட்டிக் கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல. தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் நடுநிலையாக இருந்து, பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய பா.ஜ., அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை, மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது, தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Indian
ஜூன் 21, 2024 17:08

இன்னும் பல துரோகங்கள் , பல கொடுமைகள் இருக்கு ......வர வர தெரியும் .


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 06:56

துரோகத்தின் மொத்த உருவமே பிஜேபி தானே.


Narayanan
ஜூன் 18, 2024 18:38

என்ன செய்லாம்னு சொல்லுங்க?.உங்களை பிரதமரா போட்டால் பிரச்சனை தீர்த்துவிடுவீர்களா ? உங்க கட்சி பிரச்சனைய தீருங்கள் . பார்க்கலாம்


ramani
ஜூன் 18, 2024 17:07

இடைப்பாடி பழனிச்சாமி ...! பாஜகவை குறை கூறும் யோக்யதை இல்லை. நீங்க கூட்டில் இல்லை. அது அவர்களின் விருப்பம். யாரை மந்திரியாக போடுவது என்று. உங்களை நம்பிய தொண்டர்களுக்கே துரோகம் செய்தவர் கேபி முனுசாமி ஜெயகுமார் உதயகுமார் விஞ்ஞானி ராஜூ போன்ற பேச்சைக் கேட்டு தான்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 18, 2024 14:02

மழை உரியகாலத்தில் பொய்து இருந்தால் தண்ணீர் தானே வரும் மழை பற்றாக்குறை ஏற்படும்போது பிரிசனைதான் அதை அரசியல் சுக வாசிகள் பெரிதாக்குகிறார்கள் அரசியல் கட்சிகள் அமைதியாக இருந்தாலே பிரச்சினை இல்லை


venkatakrishna
ஜூன் 18, 2024 10:50

எடப்பாடியாரே, சின்னம்மா கிளம்பிட்டாங்க. நீங்க ஒத்துப்போகலை என்றால், உங்க சங்கதிகள் அனைத்தும் வெளிவரும். கூவத்தூரை மறக்காதீங்க.


s chandrasekar
ஜூன் 18, 2024 09:58

பாவம் இவர் அரசியலில் ஒரு உப்புக்கு sappani.


sankaranarayanan
ஜூன் 18, 2024 06:02

இவர் என்ன தெரிந்துதான் சொல்கிறாரா இல்லை இவருக்கும் ஏதாவது வந்துவிட்டதா? சோமண்ணாவை, மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக மத்தில ஆளுகின்ற பாரதீய ஜனதா பார்ட்டி நியமித்திருப்பது, இவருக்கு ஏன் இந்த கோபம் தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம் மார்தட்டி சொல்ல இருக்கு என்ன துணிச்சல் கட்சியிலே காணாமலே போய்க்கொண்டிருக்கும் இவருக்கே இவ்வளவு இருந்தால் மற்றவர்களுக்கு எவ்வளவு எப்படி இருக்கும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ