உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழைக்கு வாய்ப்பு

காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று முதல் 16ம் தேதி வரை, இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் மையம் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் பல்வேறு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்த பின்னணியில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை, வரும், 16 வரை தொடரும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை