உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிக்கல்வி துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வி துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், ஒன்பது இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் வழங்கி, துறை யின் செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.தொடக்கக்கல்வி இயக்குனரக நிர்வாக பிரிவில் பணியாற்றும் சுகன்யா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றும் ஞானகவுரி, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல்நிலைக்கல்வியில் உள்ள கோபிதாஸ், தொடக்கக்கல்வி நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் பிரிவில் பணியாற்றும் ஸ்ரீதேவி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் உள்ள சாந்தி, தொடக்க கல்வி இயக்குனரகத்தின், உதவி பெறும் பள்ளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனரக தொழிற்கல்விப் பிரிவில் உள்ள ராமகிருஷ்ணன், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.கள்ளர் சீரமைப்புப் பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், பள்ளிக்கல்வி இயக்குனரக தொழிற்கல்விப் பிரிவுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முனுசாமி கள்ளர் சீரமைப்பு பிரிவுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக உள்ள ஆனந்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக் ஷாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூலை 16, 2024 05:18

தீம்கா நிர்வாகிகளை சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்று சித்திரிக்க ஏற்பாடு நடக்கிறதோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை