உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுகர்வு அதிகரிப்பால் கறிக்கோழி விலை உயர்வு

நுகர்வு அதிகரிப்பால் கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல்; தமிழகத்தில் தினமும், 35 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம், 24ல், கிலோ 84 ரூபாயாக இருந்தது. நேற்று முன்தினம், 18 ரூபாய் உயர்ந்து, 102 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், ''கறிக்கோழி உற்பத்தி 20 சதவீதம் சரிந்துள்ளது. எடை குறைவு காரணமாக, கொள்முதல் விலையில் கிலோவுக்கு, 12 ரூபாய் குறைத்து கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. நுகர்வு, வாரம், 2 லட்சம் கிலோ என, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் உற்பத்தி மேலும் சரியும். கொள்முதல் விலை உயரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ