உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது: முத்தரசன் சப்பைக்கட்டு

சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது: முத்தரசன் சப்பைக்கட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி : “கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது,” என, இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறினார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்களுக்கு இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அஞ்சலி செலுத்தி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: கள்ளச்சாராயம் விற்பது புதிதல்ல. தொடர்ந்து நடந்து வருகிறது. மெத்தனால் கலந்ததால் இச்சம்பவம் நடந்தது வெளியே தெரிந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரிகளுடன் உள்ளூர் போலீசார், வருவாய் துறையினர், மதுவிலக்கு போலீசார் கூட்டணி வைத்தது தான் இந்த சோக சம்பவத்திற்கு காரணம்.சாராய வியாபாரிகளுக்கு இருக்கும் பாதுகாப்பு வேறு யாருக்கும் இல்லை. சாராயம் விற்பதாக தகவல் கொடுத்தால், அவர் உயிரோடு இருக்க மாட்டார். ஏனெனில், சாராய வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக இருக்கின்றனர்.கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஷரவன்குமார் ஜடாவத் அறிக்கை, மிக மோசமானது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கும் டி.ஜி.பி.,க்கும் தெரியாது. ஆனால் உள்ளூர் போலீசார், உளவுத்துறை போலீசாருக்கு தெரியும். வியாபாரிகள் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதால் காட்டிக் கொடுப்பதில்லை.ஆனால், சாராயம் விற்பவர் குறித்து தகவல் கொடுப்பவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இதனால் தான் இதுபோன்ற விபரீதங்கள் நடந்துள்ளன; அவை தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 154 )

sankaranarayanan
ஜூலை 22, 2024 23:05

ஒரு கட்சித்தலைவர் பேசும் பேச்சா இது கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கும் டி.ஜி.பி.,க்கும் தெரியாது என்று. ஊரே சிரிக்கிறது இவர் எதற்காக வக்காலத்து வாங்கி பேச வேண்டும் இவருக்கு என்ன காரியம் ஆகவேண்டும்


s chandrasekar
ஜூன் 27, 2024 20:59

இவரை பிடித்து முதலில் உள்ளே போடவேண்டும் .


M Ramachandran
ஜூன் 25, 2024 20:19

உங்களுக்கும் தெரியாது அல்லவா. அப்போது அதை பற்றி ஏன் இப்போ பேசுகிறீர்கள் முத்தரசன் அவர்களெ. வயது முதிர்ந்த காலத்தில் சீனா, ரஷ்யா என்று கூறிக்கொண்டு சொச்ச காலத்தை கட்சி பென்ஷன் வாங்கி கொண்டு அமையதியாகா கழிக்கலாமெ. நீங்களும் உங்கள் கட்சியும் எப்போது 25 கோடி கைய்யேந்தி வாங்கினீர்களோ அப்போதே தெரிந்து விட்டது உங்கள் கட்சி கொள்கை பிடிப்பெல்லாம் கிடையாது என்று. தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கு குரல் கொடுப்பதில்லை. ஒரு கட்சியின் காலடியில் சரண்டர் ஆகி விட்ட்டீர்கள்.


S. Narayanan
ஜூன் 25, 2024 19:42

நாட்டில் என்ன நடக்கிறது என்று ஒரு முதல்வருக்கு தெரியாது என்றால் அவர் முதல்வர் பதவிக்கு லாயக்கு இல்லை. அப்போ மற்றவர்கள் முதல்வரிடம் சொல்லாமல் எல்லோரும் ஒருவருக்கு தெரியாமல் எல்லோரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தானே அர்த்தம். இப்போதாவது ஒப்பு கொண்டார்கள் என்று அவர்களுக்கு என்ன செய்யலாம். மக்கள் முடிவு செய்வார்கள்.


rajan_subramanian manian
ஜூன் 25, 2024 17:58

முத்தரசன் என்ற நீவீர் இன்று முதல் முட்டுஅரசன் என்று அன்போடு அழைக்கப்படுவீர்.


Masi Arumugam
ஜூன் 25, 2024 14:50

இது உலகத்தில் இல்லாத பெரிய முட்டு


Karthikeyan
ஜூன் 25, 2024 14:42

இவன மாதிரி கேவலமான அரசியல்வாதி யாருமில்லை...நல்லா ஜால்ரா தட்டு...தட்டேந்தி கட்சி நடத்துறவனெல்லாம் சீனாவினுடைய கைக்கூலிகள்...உலகப் பிரச்சினையெல்லாம் பேசுவானுங்க...இப்ப ..


Narayanan
ஜூன் 25, 2024 13:11

கம்யூனிஸ்ட் அயோக்கியர்களாக மாறிவிட்டார்கள் .சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது என்றால் அவர் என்ன கோமாவில் இருக்கிறாரா? வெளி நாட்டுக்கு போய் விட்டாரா ?அல்லது வீட்டில் ஓய்வு எடுக்கிறாரா ?


Ganesun Iyer
ஜூன் 25, 2024 13:06

முருகேசா, முட்டு குடுக்கணுமுன்னு முடிவுபண்ணிட


bal
ஜூன் 25, 2024 12:38

அப்படின்னா இந்த ஆள் மட்டும் களவாணி போல ..உள்ளே தூக்கி போடுங்கள் போக்ஸோவில்


s chandrasekar
ஜூன் 27, 2024 21:00

இவருக்கு எல்லாம் தெரியும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை