மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago
மதுரை:''தமிழகத்தில் அரசனோ, ஆண்டியோ யாருக்கும் பாதுகாப்பில்லை, '' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.மதுரை அருகே மண்ணாடிமங்கலம் கிராமத்தில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னையில் வெள்ளம் வந்த போது வழங்கப்பட்ட நிவாரணம் 5,000 கோடி ரூபாய் என்ன ஆனது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். ஆனால், தி.மு.க., தரப்பிலோ, தமிழக அரசு தரப்பிலோ இன்று வரை பதில் இல்லையே ஏன்?அப்படியானால், அந்தப் பணம் முறையாக செலவழிக்கப்படவில்லை என்பதுதானே அர்த்தம்.சென்னையில் மட்டுமல்ல, துாத்துக்குடியிலும் மழை - வெள்ளத்துக்கு பாதிக்கப்பட்டோருக்கு முறையான நிவாரணம் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்கிய பின் தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில்லை. அந்நிதி வருவதற்கு முன்பே, மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரணம் கொடுக்க வழி வகை உள்ளது. இப்படி செய்ததற்கான முன் உதாரணமும் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு திவாலாகி விட்டது. ஆனால், அதை மறைத்து வருகின்றனர். உண்மை நிலவரத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை. மத்திய அரசும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் பெருந்தன்மையோடும், நியாய உணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும். பேரிடர் நிதி வழங்குவதில் கூட கடுமை காட்டக் கூடாது; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கக்கூடாது. இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரச்னைக்கு நியாயம் கேட்டும், மீனவர்களுக்கு இருக்கும் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சமீபத்தில் தமிழக மீனவர்கள் அமைப்பைச் சேர்ந்தோர் என்ற பெயரில் சிலர் சந்தித்தனர். இதற்கு ஏற்பாடு செய்தவர் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மீனவர்கள், எந்த அமைப்பின் பிரதிநிதியும் இல்லை; பாதிக்கப்பட்டோரும் இல்லை. கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது. அதை தமிழக மீனவர்களும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு தரப்பில் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யார் என்ன சொன்னாலும், மீனவர்கள் அதை நம்புவதில்லை. குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரை, அரசனோ, ஆண்டியோ, அரசியல் கட்சி தலைவரோ யாருக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் - ஒழுங்கு என்பதே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
10 hour(s) ago | 1
11 hour(s) ago
11 hour(s) ago