உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலுாரில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்

கடலுாரில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்

கடலுார்: கடலுார் நேதாஜி சாலையில் முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார்.கடலுாரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை 5:15 மணிக்கு வருகை தந்தார். அவரை, ஆல்பேட்டையில் அமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார். அங்கிருந்து நேதாஜி சாலை வரை முதல்வர் நடந்து சென்று மக்களை சந்தித்தபடி வந்தார். வழியில் சிறுமி ஒருவர் முதல்வருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும், மேலும், இரு சிறுமிகளுக்கு முதல்வர் சாக்லேட் வழங்கியது சிறுமிகள் மத்திய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இருபுறமும் நின்றிருந்த பொது மக்களை பார்த்து கையசைத்தபடி வந்த முதல்வர், பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்று, தனது பாதுகாவலரிடம் கொடுத்தார். பெண்களில் ஒருவர் ஏற்கனவே முதல்வரிடம் எடுத்துக்கொண்ட படத்தை காண்பித்து பழைய நினைவுகளை கூறியதைகேட்டு முதல்வர் மகிழ்ந்தார்.விழா மேடை அருகே தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். பின்னர், மேடை அருகே, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையைஏற்றுக் கொண்டு, மாலை5.50 மணிக்கு மேடைக்கு வருகை தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

xyzabc
பிப் 22, 2025 07:43

ஆளுக்கு ரூ 200 ?


lasica
பிப் 22, 2025 07:12

ஆஹா என்ன அற்புதம். எங்கும் காணமுடியாதது. டோப்பா தலையன் தன்னுடைய சொந்த கால்களில் நடந்தான். சொந்த வாயாலேயே பேசினான். சொந்த மூக்கலாயே சுவாசித்தான். இன்னும் மற்றும் பிற


நிக்கோல்தாம்சன்
பிப் 22, 2025 05:38

இந்த நடந்து செல்லும் நிகழ்ச்சியால் எவ்வளவு பேருக்கு துன்பம் நிகழ்ந்ததோ , பாவம் கடலூர் மக்கள்