உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி ஆயோக்கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

நிதி ஆயோக்கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:பிரதமர் தலைமையில் நடைபெறவிருக்கும் 'நிதி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள, போலி ஜனநாயகத் தூதுவரான தமிழக முதல்வர் .ஸ்டாலின், இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மக்களை நேரடியாக வஞ்சிக்கிறார்.அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி பெறுகின்ற இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாகச் சொல்லி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.உண்மையில் தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை புறக்கணிப்பது நியாயமாகுமா? இது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா? இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Godyes
ஜூலை 25, 2024 09:42

கட்சி ஆட்சி போன்ற பொது மக்கள் அமைப்புகளில் தனி மனித உரிமை கோருவது ஜன நாயக மாண்பினை சிதைக்கும்


Godyes
ஜூலை 25, 2024 09:39

நாட்டு மக்களுக்கு தான் ஆட்சி அதில் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை


venugopal s
ஜூலை 25, 2024 08:29

இவர் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் குற்றம் குறை சொல்வதற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர். வேறு வேலையே இல்லாத வெட்டி மத்திய அமைச்சர்.


திருவேங்கடம்
ஜூலை 25, 2024 08:12

பிஹாருக்கும், ஆந்திராவுக்கும் அள்ளி உட்டபோது மௌனி முருகன். அங்கேயே போய் செட்டிலாகிடலாம்.


Prem Kumar.K
ஜூலை 25, 2024 07:51

பாஜக அமைச்சர்கள் தமிழகத்திற்கு முற்றிலும் வீணானவர்கள். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத போது, ​​அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அரைவேக்காட்டு அண்ணாமலை, தொலைக்காட்சி பார்க்கும் மக்களின் மனநிலையை கெடுக்கிறார்.


Amruta Putran
ஜூலை 25, 2024 07:13

He doesn't know English or Hindi, not even know about Tamilnadu,so sending IAS officers itself is enough


pmsamy
ஜூலை 25, 2024 06:32

எல் முருகன் முதல்வர் ஸ்டாலின் இடம் இருந்து அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும். ஜால்ரா போடுவதை நிறுத்த வேண்டும்


bgm
ஜூலை 25, 2024 08:16

எப்டி? வேங்கை வயல், கள்ளக்குறிச்சி மாடல் பற்றிய ட்ரைனிங் ஆ?


sankaranarayanan
ஜூலை 25, 2024 05:26

எல்லா பெயரிலும் நிதி என்று வைத்துக்கொண்டு நிதி உத்யோக் கூட்டத்திற்கு செல்ல வில்லை என்றால் என்ன அர்த்தம் நிதி இல்லையென்றால் கதி என்ன


Velan
ஜூலை 25, 2024 03:08

கண்டணத்து தூக்கி ஓரம் வையி. இந்த விசயத்தில் விடியலண் கருத்து நாயம் னது


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2024 01:06

கூட்டத்திற்கு வராத மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு நிறுத்தவேண்டும். டெல்லிக்கு வந்து பிச்சை எடுப்பார்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ