உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் செம்மொழி மாநாடு

சென்னையில் செம்மொழி மாநாடு

சென்னை:'சென்னையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம், இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, ஐந்து நாட்கள் நடத்தப்பட உள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ்மொழியை உயர்த்துதல்; தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல்; அரிய தமிழ் நுால்களை நாட்டுடைமையாக்குதல்; அயலகப் பல்கலைகளில் தமிழ் இருக்கைகளை உருவாக்குதல்; மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க திருக்குறள் முற்றோதல் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.உலகெங்கும் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக, ஜன., 12 அயலகத் தமிழர் தினமாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் 2025ம் ஆண்டு ஜூன் மாதம், ஐந்து நாட்கள் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கோவில்களில் தமிழ் வழிபாட்டை முன்னிறுத்துவது என, பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ