உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையை அடுத்து கோவைக்கு அதிக நிதி

சென்னையை அடுத்து கோவைக்கு அதிக நிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சிக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:பா.ஜ., - வானதி: கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மெதுவாக நடந்து, ஒரு வழியாக முடிந்துள்ளன. பராமரிப்பு பணிகள் மோசமாக உள்ளன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளங்கள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்துள்ளன. நாட்டில் வேகமாக முன்னேறும் மாநிலங்களில், ஒன்றாக தமிழகம் உள்ளது. அதேநேரத்தில், அதிக கடன் வைத்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. பீஹார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், தமிழகம், கேரளாவிற்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்குவதாக சொல்கின்றனர். அதையே நான் கேட்கிறேன். கோவை, தர்மபுரி, அரியலுாரில் ஒரு ரூபாய் வரி வாங்கினால் எவ்வளவு தருகிறீர்கள்? இதற்கு நிதி அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.தங்கம் தென்னரசு: மாவட்டங்களின் சீரான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குகிறோம். பட்ஜெட்டில் கோவைக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய தொழிற்நுட்ப பூங்கா, பாதுகாப்பு தொழில்வட சிப்காட், புதிய விமான நிலையம் ஆகியவை வரவுள்ளன. உங்கள் தொகுதிக்கும் எல்லாம் கொடுக்கிறோம். ஆனால், மத்திய அரசு கோவையை விட்டுவிட்டு, அருகில் உள்ள கொச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கிஉள்ளது.வானதி: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அதிக நிதியை, தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உத்தர பிரதேசத்தை தொடர்ந்து குஜராத், மஹாராஷ்டிராவை சேர்க்கவில்லை. தமிழகத்திற்கு கொடுத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு கடன் உதவிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட கடன் அளவில் 15 சதவீதத்தை கூட, தமிழக அரசு செலவிடாமல் உள்ளது. கோவைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க, மத்திய அரசு தயாராகவுள்ளது. அதற்கான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.அமைச்சர் நேரு: எப்போது பேசினாலும், கோவைக்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை என்று வானதி தொடர்ந்து சொல்கிறார். கோவை மாநகராட்சி சாலைகளுக்கு மட்டும், 300 கோடி ரூபாயும், தொல்காப்பியர் பூங்காவிற்கு 100 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய மழைநீர் கால்வாய் பணிக்கு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. குளங்கள் சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடித்து தரப்படும். சென்னை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சிக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ