உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் குழப்பம்! பதிவானது 64.81 சதவீதமா; 71.17 சதவீதமா?

கோவையில் குழப்பம்! பதிவானது 64.81 சதவீதமா; 71.17 சதவீதமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில், கோவை தொகுதியில், 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்களே ஓட்டளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 64.81 சதவீதம். 2019 தேர்தலை காட்டிலும், 0.95 சதவீதமே அதிகம். ஆனால், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிட்ட பட்டியலில், 71.17 சதவீதம் என இருந்ததால், குழப்பம் நிலவுகிறது. இதுவே, சமூக வலைதளங்களில் பரவியதால், இதுதொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் - 10 லட்சத்து, 41 ஆயிரத்து, 349; பெண்கள் - 10 லட்சத்து, 64 ஆயிரத்து, 394, மூன்றாம் பாலினத்தவர்கள் - 381. ராணுவ வீரர்கள் ஓட்டு - 376 தனி.இதில், 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்கள் நேற்று நடந்த தேர்தலில் ஓட்டளித்ததாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 64.81 சதவீதம். 2019 தேர்தலில், 63.86 சதவீதம் பதிவாகியிருந்தது; அதை காட்டிலும், 0.95 சதவீதமே ஓட்டு அதிகரித்திருப்பதாக கூறுவது, நம்பத்தகுந்ததாக இல்லை.

இணையதளத்தில் பொய்யா?

ஏனெனில், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிட்ட பட்டியலில், கோவையில், 71.17 சதவீதம் என கூறப்பட்டுள்ளது. இதுவே, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.2014 தேர்தலை காட்டிலும், 2019 தேர்தலில், 4.54 சதவீதம் குறைந்திருந்தது. அதனால், இம்முறை தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதனால் படித்தவர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் ஓட்டுச்சாவடிகளுக்கு ஆர்வத்தோடு வந்திருந்து, வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

படித்தவர்கள் ஓட்டு அதிகம்

காலை, 7:00 முதல் மதியம், 12:00 மணி வரை, இளைஞர்கள் பலரும் சாரை சாரையாக வந்து ஓட்டளித்தனர். படித்தவர்கள் பெரும்பாலும் ஓட்டளிக்க வராமல், வீட்டுக்குள் முடங்கி விடுவர் அல்லது சுற்றுலா கிளம்பி விடுவர்.இத்தேர்தலில் அதை தவிர்த்து, ஏராளமானோர், காலை, 7:00 - 11:00 மணிக்குள் ஓட்டளிக்க வந்ததை பார்க்க முடிந்தது. இதுபோன்ற காரணங்களால், கோவை லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதம் அபரிமிதமாக அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்களே ஓட்டளித்திருப்பதாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.2019 தேர்தலை காட்டிலும், வெறும், 0.95 சதவீதமே அதிகம். அதாவது, ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 331 வாக்காளர்களே அதிகமாக ஓட்டளித்திருக்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் வெளியிட்ட பட்டியலில், 71.17 சதவீதம் என கூறப்பட்டு இருந்தது. ஆகவே, கோவை லோக்சபா தொகுதியில் பதிவானது, 64.81 சதவீதமா அல்லது, 71.17 சதவீதமா என்கிற குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டியது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.

'எங்கிருந்து வந்ததென தெரியாது

கோவையில் பதிவான ஓட்டு சதவீதம் தொடர்பான குழப்பத்துக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டதற்கு, ''கோவை லோக்சபா தொகுதி ஓட்டு சதவீதம் - 64.81 என்பதே சரி. 71.17 சதவீதம் என குறிப்பிட்டு வரும் பட்டியல், எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் தரப்பில் தரவில்லை. 'டிரெண்டு' பார்த்து உத்தேச அடிப்படையில் கொடுத்தார்கள் என சொன்னார்கள். மாலை, 5:00 மணிக்கு ஒரு அறிக்கை தருவோம்; அதன்பின், ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒரு அறிக்கை கொடுப்போம். வரிசையில் நிற்பவர்களுக்கு, டோக்கன் தருவோம். மாலை, 6:00 மணிக்கு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு, சதவீதத்தை அதிகரித்தால், ஓட்டு எங்கிருந்து வந்தது என கேட்கப்படும். மாலை, 5:00 மணிக்கு, 57.53 சதவீதம் இருந்தது. தற்போது, 64.81 சதவீதம் இருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Cheran Perumal
ஏப் 20, 2024 17:36

தேர்தல் ஆணையம் இந்த முறையும் திமுக வின் அராஜகத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் இனி தமிழ்நாட்டில் வேறு கட்சிகளே ஆட்சிக்கு வரமுடியாது பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதற்கு தமிழக அரசு அதிகாரிகளை பொறுப்பாக்கி தண்டனை வாங்கித்தரவேண்டும்


Kasimani Baskaran
ஏப் 20, 2024 14:36

மாநில அதிகாரிகளை வைத்து நடத்தினால் தீம்கா அதன் வேலையை காட்டத்தான் செய்யும் கோவையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டு போடுவதில் சூரர்கள் தீம்காவினர் % த்தை வைத்து கணக்கை முடிக்காமல் பூத் ஏஜண்ட்களை அனுப்பிவிட்டு ஓட்டுப்பதிவில் % சதவிகிதம் என்று சொல்வது மகா பெரிய மோசடி


விஸ்வநாத் கும்பகோணம்
ஏப் 20, 2024 13:39

கோவை தொகுதியில் ஆளும் திமுக அரசு, மாவட்ட கலெக்டர், தலைமை தேர்தல் அதிகாரி இம்மூவரும் பிராம்மாண்ட கூட்டணி அமைத்து ஒரு நேர்மையான அரசியல்வாதியின் லட்சிய பயணத்தை விஞ்ஞானப்பூர்வமாக தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். இதை அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்களும் நடுநிலையாளர்களும் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் இருநூறு ரூபாய் உடன்பிறப்புகள் அல்ல. கோவையில் மறுதேர்தல் நடத்த வேண்டும். பிஜேபி நீதிமன்றங்கள் கதவை தட்ட வேண்டும்.


J.Isaac
ஏப் 20, 2024 13:02

தோல்வி பயத்தில், மறு வாக்குப்பதிவு நடத்த பிஜேபியின் தந்திரமாக இருக்கலாம்


சாமிநாதன்,மன்னார்குடி
ஏப் 20, 2024 13:39

அப்பத்துக்கு மதம் மாறினவர்கள் எல்லாம் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் ஒரே மாதிரி செயல்படுகிறாரகள் இந்த மாதிரி இந்துக்கள் ஒரே மாதிரி சிந்தித்து செயல்பட்டால் இவர்களின் கதி? அய்யோ பாவம் போகட்டும் விட்டு விடுவோம்.


SUBBU,MADURAI
ஏப் 20, 2024 12:22

தேர்தல் நடக்க ஒரு வருடம் இருக்கும் போதே நான் தமிழக தலைமைத் தேர்தல் ஆனையராக இருக்கும் சத்தியபிரதாசாஹூவை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை தினமலர் வாயிலாக சொல்லிக் கொண்டே இருந்தேன் ஆனால் மத்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்த சத்தியபிரதாசாஹூவை மாற்றவில்லை அவரை மாற்றாததன் விளைவுதான் இவ்வளவு முறைகேட்டுக்கும் காரணம் இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படும்


J.V. Iyer
ஏப் 20, 2024 12:16

குளறுபடி செய்திருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே


Ramki
ஏப் 20, 2024 13:31

திமுகவின் தில்லாலங்கடி வேலைகளில் இதுவும் ஒன்று


ராஜ்குமார்
ஏப் 20, 2024 12:11

எல்லா ஓட்டு இயந்திரங்களை மறுபடியும் ஆராய்ந்து எவ்வளவு ஒட்டு என்று சரி பார்க்க வேண்டியது அவசியம். தமிழ் நாடு எலெக்ஷன் கமிஷன் முதல் அதிகாரி 5 மணி அளவில் என்ன சதவிகிதம் தெரிவித்ததை காட்டிலும் மாவட்ட அதிகாரிகள் கூறுவது மிகவும் குறைவாக உள்ளது.


Sivagiri
ஏப் 20, 2024 11:54

ஆறு மணிக்கு மேல் , கேட்டை பூட்டிய பின் , ஆள் இல்லாத பூத்-களில் , கரை வேட்டிகள் போடும் ஒட்டு குறைந்தது ஐந்து சதவீதம் இருக்கும் ,,


venugopal s
ஏப் 20, 2024 11:40

ஒரு தொகுதியில் பதிவான ஓட்டு சதவீதத்தையே ஒழுங்காக அறிவிக்கத் தெரியாத மத்திய பாஜக அரசின் தேர்தல் ஆணையத்தின் திறமையின்மை தெரிகிறது! தேர்தல் ஆணையமும் மத்திய அரசு போலவே திறமையின்றி பணியாற்றுகிறது!


Ramki
ஏப் 20, 2024 13:30

மத்திய அரசு தேர்தல் நடத்துகிறது ஆனால் அதை முன் நின்று நடத்துவது மாநில அரசும் அதைச் சார்ந்த அதிகாரிகளும் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டுமே மாநிலத்தின் நியமிக்கப்படுகிறார்கள் மற்ற எல்லா தேர்தல் அதிகாரிகளும் மாநில அதிகாரிகளின் வர்க்கங்களுக்கு கீழ் வர்க்கங்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் நியமிக்கப்படுகிறார்கள் இல் ஆரம்பிக்கப்பட்ட புற பின்புற வழி கள்ள ஓட்டு போடுவதும் அல்லது ஓட்டுக்கள் விழாமல் செய்ய நடவடிக்கை எடுப்பதும் இந்த திருட்டு திராவிட கட்சிக்கு கைவந்த கலை ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு மார்ச் மாதமே திமுகவின் தில்லாலங்கடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன


கனோஜ் ஆங்ரே
ஏப் 20, 2024 11:29

கோவையில் மட்டும் குழப்பம் இல்ல மத்திய சென்னை தொகுதியில் முதலில் சொன்னது சதவீதம்னு இப்ப சொல்றது சதவீதம்னு சதவீதம் குறையுது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ