உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மான் வேட்டையாடியவர் கைது: துப்பாக்கி பறிமுதல்

மான் வேட்டையாடியவர் கைது: துப்பாக்கி பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மான் வேட்டையாடியதாக எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த உதயகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள், மான் தோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எம் ஜி ஆர் நகரில் மானை வேட்டையாடி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து காலை வனச்சரக அலுவலர் நித்திய கல்யாணி தலைமையில் வனவர் அமுதரசு, மற்றும் தேவ குமார், வனக்காப்பாளர் முருகேசன் மற்றும் திருப்பதி கொண்ட குழு பேராவூர் அருகில் ரோந்து பணி செய்தனர்அப்போது உதயகுமார் என்பவர் வனத்துறையினரை கண்டவுடன் மிக வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அவரை பின் தொடர்ந்து பிடித்து விசாரித்ததில் இரண்டு மான்களை புல்லங்குடி கண்மாய் பகுதியில் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் இரண்டு மான்களின் தலை மற்றும் கால்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இவ்வன உயிரின குற்ற செயலில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகரை சேர்ந்த குருசாமி மகன் சுகன், சந்திரபாபு மகன் வெங்கடேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை