உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20ம் தேதி ஆர்ப்பாட்டம் மா.கம்யூ., அறிவிப்பு

20ம் தேதி ஆர்ப்பாட்டம் மா.கம்யூ., அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழக மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம், தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரிக எல்லைக்கு சென்றுள்ளது.இலங்கை கடற்படையின் அராஜக போக்கை, மா.கம்யூ., மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை அரசையும், மீனவர்கள் பிரச்னையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் வரும் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ