உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவநாதன் உதவியாளர் கைது

தேவநாதன் உதவியாளர் கைது

சென்னை,:நிதி நிறுவன மோசடி வழக்கில், தேவநாதனின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் செயல்பட்டு வந்த, மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவன தலைவராக இருந்த தேவநாதன், 24.50 கோடி ரூபாய் மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த, தேவநாதனின் கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நிதி நிறுவனத்தின் முன்னாள்இயக்குனரும், தேவநாதனின் நேர்முக உதவியாளருமான சுதீர் சங்கர், 46 நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
செப் 13, 2024 06:58

அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் முதியோர் அவர்கள் சேமிப்பை சூறையாடிய வரும் துணைபோகும் அரசு அதிகாரிகளும் சுற்றம் சூழ மீளா எரிநரகம் புகுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை