உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொழுதுபோக்கு தளத்தை புரட்சிகரமாக்கும் டிஷ் டிவி

பொழுதுபோக்கு தளத்தை புரட்சிகரமாக்கும் டிஷ் டிவி

சென்னை:இந்தியாவில் பொழுது போக்கு அனுபவத்தை மறுவரையறை செய்ய ஒரு புதிய பாதையை அமைக்கும் முயற்சியை, 'டிஷ் டிவி' துவக்கியுள்ளது. முன்னணி 'டி.டி.எச்.,' சேவை வழங்கு னரான இந்நிறுவனம், முதலாவதாக, 'டிஷ் டிவி ஸ்மார்ட்+' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.இத்திட்டம், பொழுதுபோக்கு தொழில்துறையில் ஒரு முன்னோடித்துவ நிகழ்வு. வாடிக்கையாளர் களுக்கு டிவி மற்றும் ஓ.டி.டி., உள்ளடக்கத்தை எந்த திரையிலும், எந்த இடத்திலும், எந்த கூடுதல் செலவும் இல்லாமல் இத்திட்டம் வழங்குகிறது.'டிஷ் டிவி ஸ்மார்ட்+' சேவையின் வாயிலாக, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள் உட்பட அனைத்து டிஷ் டிவி மற்றும் 'டி2எச்' வாடிக்கை யாளர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த டிவி சந்தா பேக்குடன், பிரபலமான ஓ.டி.டி., செயலிகளையும் கண்டு ரசிக்க முடியும்.'டிஷ் டிவி ஸ்மார்ட்+' சேவைகள் சூழல் அமைப்பு, 'வாட்சோ - தி' ஓ.டி.டி. சூப்பர் செயலி 'செட் - டாப்' பாக்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு செட் - டாப் பாக்ஸ் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்கள் வாயிலாக எந்த திரையிலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதை சாத்தியமாக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி