உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் சமரச பேச்சில் அதிருப்தி: ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக்

அரசின் சமரச பேச்சில் அதிருப்தி: ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக்

சென்னை : பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால், நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக, 'டிட்டோ ஜாக்' அறிவித்துள்ளது.'டிட்டோ ஜாக்' என்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், சங்க நிர்வாகிகளுடன், கடந்த 6ம் தேதி பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதாக அரசு அறிவித்தது.இந்நிலையில், டிட்டோ ஜாக் மாநில உயர்மட்ட குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. கூட்டத்தில் மீண்டும் போராட்டம் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, அமைப்பின் நிர்வாகி தியோடர் ராபின்சன் கூறியதாவது:துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் இடமாறுதல் வழங்கிய நிலை மாறி, மாநிலத்தில் எந்த பகுதிக்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதனால், குடும்பத்தை விட்டு வெகுதுாரம் செல்ல வேண்டி உள்ளது. பதவி உயர்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும்.அடுத்ததாக, சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினோம். அதற்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதனால், திட்டமிட்டபடி நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். வரும் 29, 30, அக்., 1ல், கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

veeramani
செப் 09, 2024 09:47

தமிழக அரசின் உ லியர்கள் ஆசிரியர்கள்.. அரசின் ஆணைப்படி எங்கு வேண்டுமானாலும் ஆசிரியர்களை ட்ரான்ஸ்பர் சே ய்யலாம். அப்படி இருக்கையில் சிறு வட்டத்திற்குள் மட்டும்தான் வேலை வேண்டும் என சோ ள்வது அபத்தம்


karunamoorthi Karuna
செப் 09, 2024 08:35

என்ன போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் நடக்காது மீண்டும் மீண்டும் திமுக வுக்குத் தான் இவர்கள் ஓட்டு போடுவார்கள்


VENKATASUBRAMANIAN
செப் 09, 2024 08:20

எங்கே அன்பில் மகேஷ்.அசிரியர்களுக்காக உருகினார். யாரோஅவமானப்படுத்தி விட்டதாக கூறினார். இவர் என்ன செய்கிறார். இதுதான் திராவிட மாடல் போலும்


N.Purushothaman
செப் 09, 2024 06:35

சுயநலத்திற்காக உருப்படாத கட்சிக்கு ஓட்டு போட்டப்போ இனிச்சுதா ? சனாதன தர்மத்தின் மீது வன்மம் கொண்டு ஆட்சி செய்யும் நயவஞ்சர்கள் நரக வேதனையி அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ....


Svs Yaadum oore
செப் 09, 2024 06:34

விடியல் திராவிடனுங்க இவனுங்களே பள்ளியில் கூட்டம் நடத்துவர்களாம் ....பிறகு ஏன் அந்த பேச்சாளரை அழைத்தீர்கள் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களை இட மாற்றம் செய்வார்களாம் ..... எத்தனை நாட்கள் இந்த மதம் மாற்றி விடியல் ஆசிரியர்கள் இந்த நாடகம் நடத்துவார்கள் என்று பார்க்கலாம் ...


Svs Yaadum oore
செப் 09, 2024 06:27

டிட்டோ ஜாக் என்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவாம் .... இந்த அமைப்பின் நிர்வாகி தியோடர் ராபின்சன்......பள்ளி கல்வி முழுக்க மதம் மாற்றிகள் பிடியில்தான் ....பள்ளி கல்வி துறை முழுக்க ஏகப்பட்ட பிரச்சனைகள் ....பள்ளி கல்விக்கு அரசு செலவு செய்யும் தொகை 44000 கோடிகள் ....இதனால் எந்தப்பயனும் கிடையாது....இதை தீர்க்காமல் இவனுங்களே எவனையாவது அழைத்து வந்து பள்ளியில் கூட்டம் நடத்தி ஹிந்து மதத்தை கேவலப்படுத்தி பிறகு அவனை கைது செய்ய விடியல் அரசு சிரிப்பு போலீஸ் 200 போலீசை ஏர்போர்ட் அனுப்புவானுங்க ...படு கேவலமான விடியல் அரசாங்கம் ....


Lion Drsekar
செப் 09, 2024 06:08

தேர்தலில் இவர்களது பங்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது , நல்லாசிரியர்களுக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்


Rajarajan
செப் 09, 2024 06:00

இதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான். இவர்கள் ஆட்சி மற்றும் கல்விமுறை தரமானது என மார்தட்டிக்கொண்டு, தங்கள் வாரிசுகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் தான், அரசு ஊழியர் மற்றும் அரசு ஆசிரியர்களும் இதை பின்பற்றுகின்றனர். பின்னர் எப்படி அரசு இவர்களின் தவறுகளை தட்டிக்கேட்க முடியும் அல்லது குறைந்தபட்சம் கண்டிக்க முடியும் ?? முன் ஏர் சரியாக சென்றால், பின் ஏர் சரியாக செல்லும். அது இருக்கட்டும். தமிழக அரசு பள்ளிகளை ஒவ்வொரு 4-5 கிராமங்களாக / தாலுக்காக்களாக ஒருங்கிணைத்து, அவற்றை தனியாரின் கட்டுப்பாட்டில் விடவேண்டும். அந்த பள்ளி நிர்வாகம் அப்போது தரத்தை மேம்படுத்த ஆரம்பிக்கும். பொதுமக்களும், செல்வந்தர்களும் மனமுவந்து நன்கொடை தந்து, அந்த பள்ளிகளை சீரமைப்பர். செய்துவிட்டு பிறகு சொல்லுங்களேன். இது அடிப்படை மாற்றமே. பின்னர் ஆசிரியரின் தரம் / கற்பிக்கும் முறை போன்றவற்றிலும் மாற்றம் கொண்டுவரப்படும்.


Kasimani Baskaran
செப் 09, 2024 05:17

ஓரிடத்தில் இருந்து நிரந்தரமாக பணி செய்தால் எப்படி இடமாற்றுவதில் சம்பாதிக்க முடியும். நல்ல சம்பளத்தில் இருக்கும் ஆசிரியர்கள் நாலு மாத சம்பளத்தை கொடுத்து விரும்பிய இடத்துக்கு மாற்றல் கேட்காமலா போய்விடுவார்கள் என்ற ஒரு திராவிடக்கணக்குதான். வேலைக்கு கொள்ளை, இட மாற்றத்தில் கொள்ளை. ஒப்பந்தத்தில் கொள்ளை. அரசு வேலைக்கு செப கெத்தாக பணம் வாங்கினார். புகார் வந்தவுடன் அதை வாங்கியவர்களிடம் திரும்ப கொடுத்து தான் குற்றவாளி இல்லை என்கிறார். திராவிடக்கொள்ளைதான் போங்க...


புதிய வீடியோ