மேலும் செய்திகள்
நகராட்சிகளில் ரெய்டு; வசமாக சிக்கிய இன்ஜினியர்
5 hour(s) ago | 3
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே, கருத்து வேறுபாடு நிலவியது. அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை, கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். சட்ட சபை தேர்தலுக்கு பின், ராமதாஸ், அன்பு மணி இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது. பா.ம.க.,வையும், வன்னியர் சங்கத்தையும் அன்புமணியிடம் ராமதாஸ் ஒப்படைத்தார். இதனால், தனியாக அரசியல் கட்சி தொடங்க, தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீகாந்தி ஆலோசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், பா.ம.க.,வில் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்து விட்டது என்பதை கட்சியினரிடம் தெரியப்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தவும். மாவட்ட வாரியாக கட்சியின் பொதுக்குழுவை கூட்ட, அன்புமணி திட்டமிட்டுள்ளதாக, பா.ம.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
5 hour(s) ago | 3