உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரவலாக பெய்த மழை எதிரொலி: தீபாவளி விடுமுறையிலும் குறைந்தது மின் தேவை!

பரவலாக பெய்த மழை எதிரொலி: தீபாவளி விடுமுறையிலும் குறைந்தது மின் தேவை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநிலத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக, தீபாவளி தொடர் விடுமுறை இருந்தபோதும், தமிழகத்தில் மின் தேவை, 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தது.தமிழகத்தில் தினசரி மின்தேவை, 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்த அளவு குளிர்காலத்தில், 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கடும் வெயிலால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்தேவை 20,830 மெகாவாட் ஆக அதிகரித்தது. இதுவே உச்சபட்ச அளவாகும்.தமிழகத்தில் அக்., மாதம் வடகிழக்குப் பருவமழை துவங்கினாலும், செப்., மாதத்திலேயே பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தைவிட குறையும். ஆனால், இந்த ஆண்டு செப்., மாதம் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை காலத்தைப் போல் வெயில் சுட்டெரித்தது. அதன் காரணமாக, தினசரி மின்தேவை 17,500 மெகாவாட் வரை அதிகரித்தது.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவில்லை. இதனால், தினசரி மின்தேவை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளன்று தமிழகத்தில் தினசரி மின்தேவை, 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இது நேற்று, 5 ஆயிரம் மெகாவாட் குறைந்து, 11 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்தது.கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் விடுமுறை போலவே, மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த மழையும் மின் தேவை சரிவுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் மின் வாரிய அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
நவ 02, 2024 13:12

மின்தேவையா குறைந்தால் பனிட்டர்களுக்கு வரி மேல் வரி விதித்து இந்த குறைந்த இன்தேவையை ஈடு செய்வார்கள், அதற்க்கு புது பெயர் வைத்து புரியாத ஒரு விதியை உள்ளே புகுத்து கண்டிப்பாக செய்வார்கள், காரணம், திரும்பும் இடமெல்லாம் அதிகாரிகள் , கடின உழைப்பாளிகளாக இருந்தால் நாமே முன்வந்து கொடுக்கலாம், இலவசவாகனம், குளிர்சாதன அரை, பதவிகள் , திரும்பும் இடமெல்லாம் அதிகாரிகள், சம்பளம் முக்கிய பிரமுகர்களைப்போல் எல்லாமே லட்சம்தான், கடின உழைப்பு உழைக்க அங்கு இவர்களுக்கு எதுவுமே இல்லை, மன்னிக்கவும், எதற்க்காக இந்த பதிவு என்றால், மக்கள் பணத்தில் எல்லா நிலைகளிலும் ராஜ வாழ்வுக்கு அவரவர்கள் தங்கள் பங்குக்கு பல பதவிகள், சம்பளத்தை உயர்த்திக்கொண்டு ஆண்டுதோறும் உயர்திக்கொண்டும் போகிறார்கள் அப்படி ருக்க, இப்படி மின்தேவை குறைந்தால் தற்போது தனியார் பேருந்தை உள்ளே புகுத்தி அரசு வாகனம் பராமரிப்பு செலவு, சம்பளம் , இத்யாதி எல்லாம் சரிசெய்வதுபோல் இயங்கும், இது சாத்தியம், சத்தியமாக அமைப்பில்படுத்தவில்லையென்றால் என் பெயரை மாற்றிவைத்துக்கொள்கிறேன், வந்தே மாதரம்