வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவனுங்க நடிப்புக்கு ஆஸ்கரே தரலாம்?
என்னங்கடா இது கண்கட்டி வித்த காட்றீங்க.... நீங்கதானடா மேயரா இருக்கீங்க? நீங்கதானடா ஆட்சி அதிகாரம் பண்றீங்க? அப்பறம் யாரை எதிர்த்துடா போராட்டம் பண்றீங்க.... ஹ்ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர் ப்தூ
கோவை: சொத்துவரி உயர்வைக் கண்டித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள், மேயர் இருக்கையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்வு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்துவரி உயர்த்துவது, சொத்து வரி செலுத்த தாமதம் செய்தால் ஒரு சதவீதம் அபராதம் விதிப்பதற்கு அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது, சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், ட்ரோன் சர்வே எடுப்பதை நிறுத்தக் கோரியும், தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கொ.ம.தே.க., உள்ளிட்ட ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 17 பேர் இன்று மாமன்ற கூட்டத்தில் மேயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதன் பின், மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, விக்டோரியா ஹால் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், காந்தி சிலைக்கு சென்று. உறுதிமொழி ஏற்றனர்.
இவனுங்க நடிப்புக்கு ஆஸ்கரே தரலாம்?
என்னங்கடா இது கண்கட்டி வித்த காட்றீங்க.... நீங்கதானடா மேயரா இருக்கீங்க? நீங்கதானடா ஆட்சி அதிகாரம் பண்றீங்க? அப்பறம் யாரை எதிர்த்துடா போராட்டம் பண்றீங்க.... ஹ்ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர் ப்தூ