உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுவர் விளம்பரம் எழுதுவதில் போட்டி தி.மு.க., - பா.ஜ., மோதல்

சுவர் விளம்பரம் எழுதுவதில் போட்டி தி.மு.க., - பா.ஜ., மோதல்

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ம.பொ.சி., சாலையில், திருத்தணி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து பழைய சிண்டிகேட் வங்கி வரை, 300 மீட்டர் நீளத்திற்கு ரயில்வே நிர்வாகம் தனக்கு சொந்தமான இடத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளது.இந்த சுவரில் நேற்று திருத்தணி நகர பா.ஜ., நிர்வாகிகள் மில்கா முத்து, சூரி, கருணா உட்பட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தாமரை சின்னம் வரைந்து, பா.ஜ., தொடர்பான வாசகங்கள் எழுதினர். அப்போது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டனர். பா.ஜ., நிர்வாகிகளிடம், 'ஏற்கனவே நாங்கள் தி.மு.க., விளம்பரம் எழுதியுள்ளோம். அதனால், பாதியளவுக்கு மட்டும் விளம்பரம் எழுதிக் கொள்ளுங்கள்; அதற்கு மேல் எழுதக்கூடாது' என கூறினர். இதனால், இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, 'கெட் அவுட் மோடி' என தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். அதற்கு பா.ஜ.,வினர், 'கெட் அவுட் ஸ்டாலின்' என கோஷம் எழுப்பினர். இதனால், ம.பொ.சி., சாலையில் பரபரப்பு ஏற்பட்டதால், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தி.மு.க.,வினர் பாதி சுவரில் தி.மு.க., விளம்பரம் எழுதியும், ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் போன்ற வாசகங்கள் எழுதும் பணியிலும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி