மேலும் செய்திகள்
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
1 hour(s) ago | 8
30 நாளும் வேலை, ஊதியம்: ஊர்க்காவல் படை கோரிக்கை
1 hour(s) ago
சபரிமலையில் கற்பூர ஆழிபவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
1 hour(s) ago
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கிழக்கு மேடு கூட்ரோடு பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் கட்சி கொடியேற்ற முடிவு செய்தனர். அதன்படி, கிழக்கு மேடு பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் ரகுராமன், 35, கேதாண்டராமன், 33, மணி, 50, ராஜி, 36, மற்றும் அப்துல், 37, ஆகியோர், அதற்கான பணியில் ஈடுபட்டனர்.லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக அகற்றப்பட்ட தி.மு.க., கொடிக்கம்பத்தை மீண்டும் நடும் பணியில், ஐந்து பேரும், நேற்று காலை, 9:00 மணிக்கு ஈடுபட்டனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் கம்பம் உரசியதில், மின்சாரம் பாய்ந்து ரகுராமன் பலியானார். மற்ற, நான்கு பேர் படுகாயமடைந்து, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago | 8
1 hour(s) ago
1 hour(s) ago