உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதியை மிதிக்கும் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் கடும் சாடல்

சமூக நீதியை மிதிக்கும் தி.மு.க., அரசு: வானதி சீனிவாசன் கடும் சாடல்

கோவை : மத்திய அரசின் நேரடி நியமனத்தை எதிர்க்கும் தமிழக அரசு, தலைமை செயலகத்தில் பலரை நேரடி நியமனம் செய்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது இல்லையா என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசில் நேரடி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர், 'நேரடி நியமனம் என்பது சமூக நீதியின் மீது தொடுக்கும் தாக்குதல். தகுதிமிக்க பட்டியலின -பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர் மட்டத்தில் தட்டிப் பறிக்கும் செயல்' என கூறினார்.ஆனால், தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், இணைச் செயலர் ஜீவன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், 'தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அரசு துறைகளில் ஆலோசகர் நியமனம் தொடர்கிறது. ஆரம்பத்தில் சில துறைகளில் மட்டுமே இருந்த ஆலோசகர் நியமனம், தற்போது அனைத்துத் துறைகளிலும் பெருகிவிட்டது. எந்த வரைமுறையும் இன்றி நியமனங்கள் செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.'தமிழகத்தில், 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் அரசுப் பணிக்கு தேர்வாகி, பல நிலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆலோசகர்கள் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல' என கூறியுள்ளனர்.தி.மு.க., அரசு, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக நேரடி நியமனம் செய்கிறது என்று, தலைமை செயலக சங்கம் குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.சமுக நீதி, என முழக்கமிட்டுக் கொண்டே சமூக நீதியை மிதிப்பது தி.மு.க.,வுக்கு வழக்கமானது. இதை தலைமைச் செயலக சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. இனியும் இரட்டை வேடம் போடாமல், தமிழ்நாடு அரசு பணிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.''தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, அரசின் அனைத்து துறைகளிலும், எந்தவித வரைமுறையும், வழிகாட்டுதலுமின்றி, ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதில் அச்சாணிகளாக அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் திறமையை புறம் தள்ளிவிட்டு, ஆலோசகர்களை நியமித்து, கொள்கை முடிவுகளை எடுக்கும் தி.மு.க., அரசின் நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் நடந்து வரும், ஆலோசகர்கள் நியமனங்களை, முற்றிலும் கைவிட வேண்டும்.''- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஆக 28, 2024 10:47

வசூலில் திறமை காட்டிய "பல்லுபோன" ரிடயர்ட் பழம் பெருச்சாளிகளை இழக்க மனமில்லாமல் அவர்களை ஆலோசகர்களாக நியமிக்கிறார் விடியல். இந்நியமனங்களெல்லாம் மருமகனின் முடிவுதானாம். நிதி குடும்பத்திற்கு நிதி சேர்த்துத் தருவதே சமூகநீதியல்லவா?


M.S.Jayagopal
ஆக 28, 2024 10:12

சமூக நீதி வேண்டும் என்று பேசும் பலரின் உண்மையான ஆர்வம் மக்களை ஏமாற்றி பதவிக்கு வந்து சமூக நிதியை களவாடுவதில்தான் உள்ளது.


Barakat Ali
ஆக 28, 2024 09:49

எதிலும் இரட்டை வேடம் என்னும் அசிங்கத்தை செய்ய திமுக எப்போதும் கூச்சப்பட்டதே இல்லை .... 2011-21 காலகட்டத்தில் பத்தாண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமில்லை ... விலைவாசியும் கட்டுக்குள் இருந்தது .... மக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்தனர் .... தொடர்ந்து இரு முறை ஒதுக்கப்பட்டதால் திமுக திருந்திவிட்டது என்று மக்கள் நினைத்துவிட்டனர் ....


Barakat Ali
ஆக 28, 2024 09:37

சாதி, மதம் பார்க்காமல் தகுதி திறமை மட்டும் பார்த்து நியமிக்கும் பழக்கம் யூ பி ஏ காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலேயே இருந்தது ..... அப்போதெல்லாம் ஒன்றியத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலேயே திமுக கவனமாக இருந்ததால் இதைக் கவனிக்கலை ....


Mr Krish Tamilnadu
ஆக 28, 2024 09:33

அரசு ஊழியர்கள், ஆலோசகர்கள் யார் இருந்து என்ன புண்ணியம். காவிரியில் நமது சொந்த நிதியில் சொந்த யோசனையில் புதிய அணை கட்ட முடியவில்லையே. என்னதா, நிர்வாகம்???. என்னதா யோசனை???. வானதி மேடம், போதை பொருள் கோவையில் புழங்குவதாக நியூஸ் வருதோ?. நீங்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த?. போதையின் பாதிப்புகளை எடுத்து கூறி, உங்க லெவல்லா தடுக்க முயற்சி பண்ணுறீங்களா?


Barakat Ali
ஆக 28, 2024 09:30

குடும்ப கட்சியில் சமூகநீதி க்கு வேலையில்லை ....


அப்பாவி
ஆக 28, 2024 07:39

ஆட்டுக்குட்டியின் இடத்தைப் பிடிக்க கடும் போடி. ஆளாளுக்கு ஸ்டேட்மெண்ட்.


Barakat Ali
ஆக 28, 2024 09:50

உங்க கச்சியில துக்ளக் மன்னனுக்கு அடுத்ததா யாருன்னு இப்பவே குடுமிப்புடி நடக்கு ... சிகிச்சைக்கு போன மன்னர் நடை உடையோட வரப்போறதில்ல ன்னு முடிவே பண்ணிட்டானுவோ ..... அதை சரிபண்ணப்பாரு மொதல்ல ...


Mettai* Tamil
ஆக 28, 2024 12:35

ஊழலை கட்டுப்படுத்த ஆளாளுக்கு ஸ்டேட்மெண்ட் கண்டிப்பாக தேவை .....


Svs Yaadum oore
ஆக 28, 2024 07:14

மத்திய அரசு நேரடி நியமனம் செய்தால் அது சமூக நீதிக்கு எதிரானது என்று இங்குள்ள விடியல் திராவிடனுங்க கூவுவானுங்க .....மத்திய அரசு , இயக்குனர் நிலையில், 45 பணியிடங்களை நிரப்ப முயற்சித்த போது, அதை எதிர்த்து குரல் கொடுத்து இந்த விடியல் மதம் மாற்றிகள்தான் ...ஆனால் விடியல் ஆட்சியில் நேரடி நியமனம் செய்தால் அப்ப மட்டும் சமூக நீதி உறங்க போகுமா ??...


Svs Yaadum oore
ஆக 28, 2024 07:08

தி.மு.க., அரசு, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக நேரடி நியமனம் செய்கிறது என்று, தலைமை செயலக சங்கம் குற்றச்சாட்டு .....தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, அரசின் அனைத்து துறைகளிலும், எந்தவித வழிகாட்டுதலுமின்றி, ஆலோசகர்கள் நியமனம் என்று செய்தி ....இந்த ஆலோசகர்கள் எல்லாம் எவன் என்று பார்த்தால் மொத்தமும் மதம் மாற்றிகள் கூட்டம்தான் .....அவனுங்க தான் இப்பொது ஆட்சியில் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை