உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் கோபத்துக்கு தி.மு.க., அரசு ஆளாக நேரிடும்

முருக பக்தர்கள் கோபத்துக்கு தி.மு.க., அரசு ஆளாக நேரிடும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : முருக பக்தர்கள் மாநாட்டை தி.மு.க., அரசு நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை:

முருக கடவுள் பக்தர்களை இணைத்து, அகில உலக முருக பக்தர்கள்மாநாட்டை தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நாத்திகம் பேசும், ஹிந்து மத நம்பிக்கைகளை தரம் தாழ்ந்து பேசும் தி.மு.க., அரசு, இதை நடத்துவது முருக பக்தர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செம்மொழி மாநாடு என்ற தலைப்பில் கேளிக்கை விழாவை நடத்தி, தன்னுடைய குடும்பத்தாருக்கு மட்டும் விளம்பரம் தேடியதை மக்கள் மறக்கவில்லை. அதேபோலவே, தற்போதைய தி.மு.க., அரசும் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கும் சத்ருசம்ஹார மூர்த்தியான ஜெயந்திநாதனின் உக்கிரகத்திற்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

muthu
மே 31, 2024 13:13

Why you not opposed when BJP did vel Function for vote politics but oppose when DMK govt wants lord muruga devotee blessings in the name of vote politics .


S.jayaram
மே 31, 2024 12:33

உண்மைதான் இவர்கள் யார் இதை நடத்த, கலந்து கொள்பவர்கள் யார் தெரியுமா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமறுக்கும் கேரள, கர்நாடக முதல்வர்கள், மற்றும் அவர்களிடம் தண்ணீர் கேட்க மறுக்கும் தமிழக முதல்வர், இவர்களில் யாரும் முருகபக்தர்கள் இல்லை அப்புறம் ஏன் மாநாடு முருகன் புகழை உலகெங்கும் பரப்ப போகிறார்களாம், ஏற்கனவே உலகின் பல பாகங்களிலும் முருகன் திருவிழாக்கள் தமிழர்களால் கொண்டாடப் படுகின்றன வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு பயன் படுத்த இந்த ஏற்பாடு


GMM
மே 30, 2024 19:52

தற்போது ஆளும் கட்சி திமுக. இந்து தெய்வ வழிபாடு பிடிக்காது. இந்து அறநிலைய துறையின் கீழ் ஏதோ ஒரு திட்டம்.? திமுகவினர் பலர் நாத்திகம். வர முடியாது. தமிழர்கள் திமுகவை நம்ப முடியாது. வரும் முருக பக்தர்கள் மொட்டை அடித்து உத்திராட்ச மாலை அணிவித்து வருவார்களா? சைவம் இருக்குமா? சில சாதி மக்கள் ஒவ்வொரு கார்த்திகைக்கு விடுப்பு எடுத்து, விரதம் இருக்கும் பழக்கம் உண்டு. விளம்பர விழா. ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருப்பவர்கள் வழிபட தமிழகம் வர துவங்கி விட்டனர். அருகில் சக்தி வாய்ந்த கோவில் இருந்தும் வழிபடும் பழக்கம் இல்லை. மத நாடகம் வேண்டாம்.


Malarvizhi
மே 30, 2024 13:09

என்னது? தி மு க மதசார்பற்ற கட்சியா?


ஆரூர் ரங்
மே 30, 2024 12:14

அலகு குத்தி வேல் காவடி எடுத்து பிழைக்கும் கூட்டத்தை அந்த நாளிலேயே 21m ம் பக்கத்தில் ஈவேரா கூறிவிட்டார்.


Sampath Kumar
மே 30, 2024 11:59

அது எப்படி சாத்தியம்? நீ மட்டும் தான் நடத்தணுமா / உனக்கு தான் முருகன் பெர்மிஸ்ஸின் குடுத்து இருக்கின்ற?


Svs Yaadum oore
மே 30, 2024 12:33

மத சார்பின்மையாக மேய்ப்பருக்கு நடத்தலாமே .....விடியலை யாரும் தடுக்க மாட்டார்கள் ....


venugopal s
மே 30, 2024 11:58

போலி பரமாத்மாக்களைப் பார்த்தே கோபப்படாத கடவுள் திமுக அரசு முன்னெடுத்துச் செய்யும் ஒரு நல்ல காரியத்தை பார்த்து ஏன் கோபப்படப் போகிறார்?


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 18:12

உண்மையிலேயே நீ ஹிந்து தான? கோவில்களை இடித்த திருட்டு திராவிட கூட்டம் ஹிந்துக்களுக்கு நல்லது செய்யும் என்று சொல்ல உனக்கு கூச்சமாக இல்லையா கொத்தடிமையே?


AMBROSE SANTHASEELAN L
மே 30, 2024 10:49

கடவுளுக்கு பயந்தவா்களா தி.மு.க.வினா். இவா்கள் முருகப்பெருமானுக்கு விழா எடுப்பதாக கூறி விளம்பரம் தேடி. அதனால் வரும் கோடிக்கணக்கான ரூபாயை தங்களுடைய குடும்பத்திற்கு சோ்த்து வைப்பாா்கள். எப்பொழுதும் போல் பசியால் வாடும் மக்கள் வாடிக்கொண்டு தான் இருக்கின்றனா். முருகப் பெருமானே எல்லா மக்களையும் காத்தருளும்.


முருகன்
மே 30, 2024 10:08

இவர்கள் மட்டுமே விளையாடும் ஆட்டத்தை அடுத்தவர் விளையாட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழும் அல்லவா


duruvasar
மே 30, 2024 09:55

2026 கற்கும் சோ அவர்கள் கூறியது கட்டாயம் நடக்கும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ