தி.மு.க., முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு, தி.மு.க., முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை பிறந்த நாள், தி.மு.க., தோற்றுவிக்கப்பட்ட நாள் என, இம்மூன்றையும் ஒன்றிணைத்து, ஒவ்வொரு ஆண்டும், தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழா, வரும் 17ல் சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்க உள்ளது.முப்பெரும் விழாவை ஒட்டி, ஆண்டுதோறும் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, பாரதிதாசன், அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.இந்த ஆண்டுக்கான ஈ.வெ.ரா., விருது - பாப்பம்மாள், அண்ணாதுரை விருது - மிசா ராமநாதன், கருணாநிதி விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாரதிதாசன் விருது - கவிஞர் தமிழ்தாசன், அன்பழகன் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.