உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் தி.மு.க., பங்கு கொடுக்குமா: சீமான்

கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் தி.மு.க., பங்கு கொடுக்குமா: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: வரும் தேர்தலில், மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் கூட்டணி சேர வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தி.மு.க.,வையும் சேர்த்து தான் திருமாவளவன் சொல்கிறார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கூட்டணி ஆட்சியில் பவன் கல்யாணுக்கு பங்கு கொடுத்தது போல, தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். கருணாநிதி குடும்பத்தில் தான் துணை முதல்வர்கள் இருக்க வேண்டுமா? இதை எதிர்த்து தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன் நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். புதிதாக கட்சி துவங்கும்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கை தான். விஜய் அரசியலுக்கு புதிது. நான் கட்சி துவங்கிய போதும், இப்படி பல இன்னல்களை சந்தித்தேன். விஜய் சந்திக்க வேண்டிய இன்னல்கள் நிறைய இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ramesh
செப் 15, 2024 12:11

தி மு க தேர்தலில் கொடுக்கும் சீட்களை வாங்கி கொண்டு கூட்டணியில் இருந்தால் அடுத்த தேர்தலிலும் திருமா வல்லவனுக்கு சீட் கிடைக்கும் .இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் ஏற்கனவே இடம் பிடிக்க துண்டுபோட்டு வைத்து இருக்கும் ராமதாஸ் உள்ளே வந்து விடுவார் .உள்ளது போச்சி என்ற கதைதான் .இதை தான் ராம் தாஸ் எதிர்பார்த்து இருக்கிறார்


Mani . V
செப் 15, 2024 04:49

யோவ் வீட்டில் ஒரு சேர் கொடுத்து உட்கார வைத்து ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை. இதில் ஆட்சியில் பங்கு குடுக்கணுமாம். அங்கு வாலாட்டிக் கொண்டு திரியும் திருமாவை கேட்டுப் பார் உண்மை புரியும்.


முக்கிய வீடியோ