உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்; அண்ணாமலை தாக்கு

தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்; அண்ணாமலை தாக்கு

சென்னை: 'அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது. தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது. கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. எம்.பி., தொகுதிகள் குறையும் என பிரச்னையை ஆரம்பித்தது முதல்வர் ஸ்டாலின். நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் புரளியை பரப்பி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eogvzfri&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக மக்களை குழப்புவதே தி.மு.க.,வின் நோக்கம். விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டோம். தெளிவாக விளக்கம் சொன்ன பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் எதற்காக? தொகுதி மறுசீரமைப்பு பற்றி புரிந்துக் கொள்ளாமல் மக்களை குழப்புகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்த போதும் தி.மு.க., மக்களை குழப்பியது. தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் பற்றி பேசாமல் மக்களை திசை திருப்புகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரிப்பது காங்கிரசின் திட்டம். அரசியலில் இருந்து வைகோ போன்றவர்கள் ஓய்வு பெற வேண்டும். முதல்வர் தனது பிறந்தநாள் விழாவில், மேடையில் ஏறி பா.ஜ.,வை திட்டினார். பா.ஜ.,வை யார் அதிகமாக திட்டுவது என்ற போட்டி தான் அவர்களுக்குள் இருந்தது. 4 ஆண்டுகளில் என்ன வேலை செய்தீர்கள் என்று பேச வேண்டியது தானே? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMESH
மார் 01, 2025 22:07

பாலியல்..போதை...கொலை..கொள்ளை...இதுவே திராவிட மாடல் ஆட்சி


K.Ramakrishnan
மார் 01, 2025 18:19

பா.ஜ. கலந்து கொள்ளாவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கட்டும். அதுதான் நல்லது.


madhes
மார் 01, 2025 17:37

நீங்கதாண் மக்களை குழப்புறீங்க, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இந்திய திருநாட்டின் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதால் மோடி வழங்கும் தண்டனை இது, பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலத்தில் படிக்காத தற்குறிங்களுக்கு அதிக எம்பி தொகுதியை குடுத்து என்னத்த சாதிக்கப்போற இந்த மோடி,


Sridhar
மார் 01, 2025 15:37

களத்துல இறங்குங்கய்யா. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூட்டங்களை ஒவ்வொரு கிராமத்திலும் நடத்துங்கள். உண்மை நிலவரத்தை விளக்கிவிட்டு, அவர்களிடம் கருத்து கணிப்பு எடுங்கள். முதலில் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது, சரியான விவரங்களை புரிந்து கொண்டிருக்கிறார்களா, இல்ல திருட்டு கும்பலின் பிரச்சாரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களானு முதல்ல கண்டுபிடிங்க. அதற்க்கு ஏற்பவாறு உங்கள் கட்சி பிரச்சார யுக்திகளை வடிவமையுங்கள் சும்மா ட்விட்டர் ஹாஷ்டாக் போட்டுட்டு எல்லாம் முடிந்ததுனு மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்திக்க போயிடாதீங்க. பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களையும் அதன் உறுப்பினர்களையும் சந்தியுங்கள். அவர்கள் பிரச்சனை என்ன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு அமையும் என்பதையெல்லாம் விளக்குங்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உங்கள் உறுப்பினர் எண்ணிக்கையை வலுப்படுத்துங்கள். நிஜமாகவே ஒரு தலைவரா செயல்படுங்கள்.


Jay
மார் 01, 2025 15:24

திமுக உயர்ந்த கொள்கைகளை கொண்ட கட்சி என்று கூற முடியாது. திறமையான தலைமை கொண்ட கட்சி என்று கூற முடியாது. முழு ஜனநாயக கட்சி என்றும் கூறமுடியாது, குடும்ப ஆட்சி நடக்கிறது. கடந்த கால உதாரணங்களை எடுத்துப் பார்த்தாலும் நாற்றம் அடிக்கும் தான். பிறகு வேறு என்ன வழி? மக்களை குழப்பி ஓட்டுக்களை தேர்த்துவதுதான். திமுகவிற்கு வாடகைக்கு வாயை விடும் 100 பேர், லெட்டர் பேடு இயக்கங்கள், அரசு ஊழியர்கள், 200 ரூபாய் ஊபிசுகள் என சும்மா சொல்லக்கூடாது திறமையாக நாடகம் நடத்தி குழப்புகிறார்கள். இதுவரை அதை பேசுவதற்கு ஆள் இல்லாமல் இருந்தது தற்போது அண்ணாமலை அதற்கு முயற்சி எடுத்தாலும் அடிமைத்தனம் ஆழ ஊன்றி இருப்பதால் மக்களுக்கு புரியாது.


ramesh
மார் 01, 2025 17:51

200 ரூபாய் வாடகை வாங்கித்தான் இங்கே வாயை விடுகிறீர்கள் .பழக்க தோஷம் . அதனால் தன்னை போல பிறரையும் நினைத்து கருத்து போடுகிறார்


சமீபத்திய செய்தி