உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் தேச பக்தராக வேலை செய்யுங்க: கட்சியினருக்கு தெம்பூட்டிய கெஜ்ரிவால்!

தேர்தலில் தேச பக்தராக வேலை செய்யுங்க: கட்சியினருக்கு தெம்பூட்டிய கெஜ்ரிவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2025ம் ஆண்டு டில்லி சட்டசபை தேர்தலுக்கு ஆம் ஆத்மியின் திட்டம் என்ன என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.டில்லி, பிடம்புராவில் கட்சித் தொண்டர்கள் மத்தியில், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசியதாவது: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 11 பணியாளர்கள் கொண்ட குழுக்கள் இருப்பார்கள். மண்டல பொறுப்பாளர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். பகத் சிங் மற்றும் மகாத்மா காந்தி போன்றவர்கள் அரை நாள் வேலை செய்திருந்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 2025 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினராக வேலை செய்யாதீர்கள். தேச பக்தராக பணியாற்றுங்கள்.

பா.ஜ., சதி

உள்கட்சி சண்டை நடந்தால், வரவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்விக்கு வழிவகுக்கும். ஆம் ஆத்மியின் திட்டங்களை நிறுத்த பா.ஜ., அதிகாரம் பெற விரும்புகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கான பஸ் பயணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஆம் ஆத்மி அரசின் இலவசத் திட்டங்களைத் தடுக்க, பா.ஜ., சதி செய்து வருகிறது. ஆம்ஆத்மி கட்சி வெற்றிபெறாவிட்டால் அரசு பள்ளிகளுக்கு என்ன நடக்கும் என்று நான் கவலைப்படுகிறேன் .மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் உயரும்.

திட்டங்கள்

நான், சிறையில் இருந்த காலத்தில், சாலை சீரமைப்பு, முதியோர் ஓய்வூதியம், மருத்துவமனைகளில் இலவச மருந்துகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பா.ஜ., நிறுத்த முயற்சி செய்தது.இப்போது மக்கள் இலவச மின்சாரம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். எனவே ஆம் ஆத்மி அரசாங்கம் வழங்கும் திட்டங்களை முடக்குவதற்கு அவர்கள் டில்லியில் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:51

நான் பிரதமர்,ஜனாதிபதியானால் உடனே இந்த சட்டம் கொண்டு வருவேன் 1.இலவசம் அறிவிப்பவர் தங்கள் அல்லது தங்கள் கட்சியின் பணத்திலிருந்து தான் கொடுக்கவேண்டும் அரசின் பணத்திலிருந்து அல்ல 2. தவறு கண்டேன் சுட்டேன் அவன்/அவள் ரத்த உறவுகளையும் சேர்த்து , சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் . மற்ற எல்லா சட்டமும் குப்பைக்கூடையில் போடப்படும். நாடு நல் வழியில் செல்லும் நல் மக்கள் மட்டுமே இருப்பார்கள்


என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:43

ராகுல் காந்தி ஸ்டாலின் கெஜ்ரிவால் சித்தராமய்யா ................. இந்த மாதிரி திருட்டு திராவிட உளறல்கள் இருக்கும் வரை மத்தியில் மோடி / பிஜேபி அரசு தான்...


Indhuindian
அக் 20, 2024 13:54

சாத்தான் வேடம் ஓதுது


sridhar
அக் 20, 2024 13:36

தேச பக்தராக வேலை செஞ்சா பிஜேபிக்கு தான் வோட்டு போடுவாங்க , பரவாஇல்லையா


Jysenn
அக் 20, 2024 13:14

இந்த திருடன் திராவிட மாடல் திருடர்கள் போலவே பேசுகிறான் .


Nandakumar Naidu.
அக் 20, 2024 12:56

இதை சொல்வது யார் என்று பாருங்கள். தேச விரோத, சமூக விரோத மற்றும் ஹிந்து விரோத கேஜ்ரின்னுதின் சொல்லுகிறான். இவர்களெல்லாம் இந்தியாவின் சாபக்கேடு. அழிக்க பட வேண்டிய தீய சக்தி.


Ramesh Sargam
அக் 20, 2024 12:31

தேசபக்தியை பற்றி ஒரு தேசதுரோகி பேசுவது கோபத்தை உண்டாக்குகிறது. இவனை சிறையில் இருந்து ஜாமீன் கொடுத்து வெளியில்விட்டது மிகப்பெரிய தவறு.


Duruvesan
அக் 20, 2024 12:09

கெஜ்ரி சோர் ஹை. EVM னு சொல்லி சொல்லியே EVERYBODY VOTEFOR MODI மோடியை ஜெயிக்க வெக்கீர்ராரு


Sundar R
அக் 20, 2024 11:51

Many politicians in Bharat have been convicted for crimes like corruption, murder or disqualification from office. Scoundrels & Antisocial elements like Spectrum Raja, Phoolan Devi, Laloo Prasad Yadav, Kejriwal have spent not more than 2 years after sentenced. And, eventhough they are proved criminal convicts, they are re-occupying their posts of MLA/MP/Minister/CM and continue to enjoy power and loot our peoples money. Kejriwal is searching for the other way around. SHAME. SHAME. SHAME


GMM
அக் 20, 2024 11:32

உயர் கல்வி, மருத்துவம் எப்போதும் இலவசம் கூடாது. இலவச மின்சாரம், பெண் பஸ் பயணம் போன்ற தகுதி இல்லாமல் ஓட்டுக்கு வாரிவழங்கும் சலுகைகள் உடன் தடை செய்ய வேண்டும். தனி நபர் வரிப்பணத்தை எடுத்து தானம் செய்ய ஆம் ஆதமிக்கு உரிமை யில்லை. வட இந்திய திராவிடர் கெஜ்ரிவால். சட்ட விரோத ஊடுருவல் காரர்கள், இந்திய எதிரிகளுடன் ஆம் ஆத்மி கூட்டு நிறுத்தாமல் தேச பக்தி வளராது.


முக்கிய வீடியோ